அடக்கருமமே.. தங்க டாய்லெட்டில் ஜிபி முத்து.. கூடவே அந்த பிரபலமும்.. தீயாக பரவும் வீடியோ!
சென்னை: பிரபல ஸ்பா நிறுவனம் ஒன்றின் பாத்ரூம் டூர் வீடியோவை ஜி.பி. முத்து செய்துள்ள நிலையில், அந்த காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. பிக் பாஸ் பிரபலமான ஜி.பி. முத்து "பேதியில போவான்" என பேசியே சோஷியல் மீடியாவில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர். தற்போது உண்மையிலேயே டாய்லெட்டில் உட்கார்ந்த படி வீடியோவை வெளியிடும் அளவுக்கு வந்து விட்டார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
டிக்டாக் மூலம் பிரபலமான ஜி.பி. முத்து தனியாக யூடியூப் சேனல் நடத்தி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ஜி.பி, முத்துவால் ஒரு வாரம் கூட அந்த ஷோவில் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

ஆரம்பத்திலேயே கமல்ஹாசனை கலாய்த்து விட்டார் என ட்ரோல்கள் குவிந்த நிலையில், அதிரடியாக வெளியேறினார் ஜி.பி. முத்து. அஜித்தின் துணிவு, பாபா பிளாக் ஷீப், ஷிவானி நடித்த பம்பர் உள்ளிட்ட சில படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
தங்க டாய்லெட்: இ ஸ்பா சலூன் சென்னையில் புதிதாக திறந்துள்ள ஸ்பாவில் தங்கத்தால் ஆன டாய்லெட் வைக்கப்பட்டுள்ளதை ஜி.பி. முத்து பாத்ரூம் டூர் நடத்தி வெளிப்படுத்தி உள்ளார். அவருடன் சினிமா படங்களில் நடித்து வரும் காளையனும் உடன் சென்று பார்வையிட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன. ஜி.பி. முத்து தங்க டாய்லெட்டில் உட்காரும் போது காளையன் அடித்த கமெண்ட் எல்லாம் வேறலெவல்.
மலேசியா, தாய்லாந்தில் இருப்பது போல: வெளிநாடுகளில் இருக்கும் ஸ்பா, மசாஜ் சென்டருக்கு இணையாக சென்னையிலேயே தற்போது உலகத் தரத்தில் ஸ்பாக்கள் வந்து விட்டது என அந்த வீடியோவில் காட்டியுள்ளனர். தங்கத்தால் ஆன டாய்லெட், ஆட்டோமெடிக்காக திறக்கும் சென்சார் டாய்லெட் என ஏகப்பட்ட விஷயங்களை ஜி.பி. முத்து எக்ஸ்ப்ளோர் செய்துள்ளார்.
வேட்டி அணிந்துக் கொண்டு: வழக்கம் போல வீட்டில் லுங்கி கட்டிக் கொண்டு வீடியோ போடுவது போல அல்லாமல் நல்லா பட்டு வேட்டி பட்டு சட்டை அணிந்துக் கொண்டு அப்படியே மாப்பிள்ளை கணக்கா தங்க டாய்லெட்டில் ஜி.பி. முத்து அமர்ந்தபடி போஸ் கொடுத்து விட்டு யூடியூபில் உடனடியாக "ஜி.பி. முத்து தங்க கக்கூஸ்ல உட்கார்ந்துருக்காரு பாருங்க" என வீடியோ போடுவாங்க என ஒரு யூடியூப் சேனல் எடுத்த வீடியோவுக்கே பங்கமாக கமெண்ட் செய்திருக்கிறார்.
பட வாய்ப்பு இல்லை: ரியாலிட்டி ஷோவில் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாத ஜி.பி. முத்துவுக்கு பெரிதாக பட வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. எப்போதாவது ஒரு சில படங்களில் அதிகபட்சம் ஒரு நாள் கால்ஷீட் மட்டுமே கிடைத்து வருகிறது. அதனால், யூடியூப் மற்றும் சின்னத்திரை என கிடைக்கும் வாய்ப்புகளை இப்படி பயன்படுத்தி வருகிறார். அர்ச்சனா மற்றும் அவரது மகள் ஸாரா செய்த பாத்ரூம் டூர் டிரெண்டான நிலையில், ஏகப்பட்ட பாத்ரூம் டூர் வீடியோக்கள் வெளியாகி விட்டன.


Click it and Unblock the Notifications











