twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூரரைப்போற்று படத்தில் வந்த அந்த ஸ்ட்ராங் கேரக்டர்.. சுதா கொங்கராவை பாராட்டி தள்ளிய ஜிஆர் கோபிநாத்!

    |

    சென்னை: சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்ற பொம்மி கேரக்டருக்காக இயக்குநர் சுதா கொங்கராவை பாராட்டியுள்ளார் ஜிஆர் கோபிநாத்.

    சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் சூரரைப் போற்று. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்.

    36 வயசு.. சிங்கிள்.. விவாகரத்து.. குழந்தை இல்ல.. விஜய் டிவி டிடியின் மகளிர் தின குட்டி ஸ்டோரி! 36 வயசு.. சிங்கிள்.. விவாகரத்து.. குழந்தை இல்ல.. விஜய் டிவி டிடியின் மகளிர் தின குட்டி ஸ்டோரி!

    இதேபோல் மோகன் பாபு, பரேஷ் ராவல், ஊர்வசி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பல்வேறு எதிர்ப்புகளை மீறி நவம்பர் 12ஆம் தேதி ஓடிடி தளத்தில் இப்படம் வெளியானது.

    ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கை

    ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கை

    இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

    சுதாவுக்கு சல்யூட்

    சுதாவுக்கு சல்யூட்

    இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள பொம்மி கேரக்டருக்காக இயக்குநர் சுதா கொங்கராவை பாராட்டி ஜிஆர் கோபிநாத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, இந்த சிறப்பான நாளில் அபர்ணா மூலம், பொம்மி என்ற கேரக்டரை உருவாக்கிய சுதா கொங்கராவுக்கு சல்யூட்.

    அசாத்திய துணிச்சல்

    அசாத்திய துணிச்சல்

    ஒரு அசாத்திய துணிச்சல் உள்ள ஒரு பெண் எல்லா முரண்பாடுகளுக்கும் இடையில் தனது கனவை தொடர்ந்து குடும்பத்தையும் ஒன்றாக கொண்டு செல்கிறார். எல்லா பெண்களுக்கும் உத்வேகம் அளிக்கும் ஒரு கேரக்டர் இவ்வாறு ஜிஆர் கோபிநாத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    ஜிவி பிரகாஷ் இசை

    ஜிவி பிரகாஷ் இசை

    சூரரைப்போற்று படத்தில் அபர்ணா பாலமுரளி, பொம்மி கேரக்டரில் நடித்தார். படத்தில் அவருடைய நடிப்புக்காக பலரும் பாராட்டினர். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    GR Gopinath Salute Sudha Kongara for Bommi character in Soorarai pottru movie. He has twitted, ‘Salute to Sudha on on this special day for creating BOMMI, played to perfection by Aparna, a feisty woman of extraordinary courage and resilience who pursued her own dreams against all odds while holding the family together. Inspiration to all women to follow their passions.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X