கிரகலட்சுமிக்கு முன் ஜாமீன்: தினமும்மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவு
சென்னை:பிரஷாந்தின் மனைவி கிரகலட்சுமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.
நாராணன் வேணுபிரசாத்தை திருமணம் செய்து கொண்டதை மறைத்து கிரகலட்சுமி, தன்னை மோசடி செய்து கல்யாணம் செய்து கொண்டதாவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.இந் நிலையில், கைதாவதில் இருந்து தப்ப தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி கிரகலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை இன்று நீதிபதி ரகுபதி விசாரித்தார். விசாரணைக்குப் பின்னர் கிரகலட்சுமிக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
ஒரு வாரத்திற்கு தினசரி தி.நகர் மகளிர் காவல் நிலையத்தில் கிரகலட்சுமி ஆஜராக வேண்டும். தேவைப்பட்டால், காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்க வேண்டும் என நீதிபதி நிபந்தனையும் விதித்தார்.
கிரகலட்சுமிக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது, அப்படியே வழங்கினாலும் அவரை சென்னையில் தங்க விடக் கூடாது என்று கோரி பிரஷாந்த் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
More from Filmibeat
actor கிரகலட்சுமி நடிகர் நிபந்தனை நீதிமன்றம் பிரசாந்த் புகார் போலீஸ் மனைவி முன்ஜாமீன் மோசடி first marriage grahalaxmi prashanth preventive wife


Click it and Unblock the Notifications











