கிரகலட்சுமி-வேணுபிரசாத் ஆஜர்

By Staff

நடிகர் பிரஷாந்தை இரண்டாவது திருமணம் செய்த கிரகலட்சுமியும், அவரது முதல் கணவர் வேணு பிரசாத்தும் விவகாரத்து வழக்கில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராயினர்.

தனது கணவர் பிரஷாந்த் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கிரகலட்சுமி புகார் கொடுத்திருந்தார். இதற்கிடையே வேணுபிரசாத் என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக போலீசில் நடிகர் பிரஷாந்த் புகார் செய்தார்.

இதையடுத்து வேணுபிரசாத், தனக்கும் கிரஹலட்சுமிக்கும் திருமணம் நடந்ததை போலீசில் ஒப்புக் கொண்டார். இந்த திருமண மோசடி வழக்கில் கைதாகாமல் தப்ப கிரகலட்சுமி குடும்பத்தோடு முன் ஜாமீன் வாங்கியுள்ளார்.

இதற்கிடையில் முதல் கணவரான வேணுபிரசாத், தனக்கு 2வது திருமணம் ஆகிவிட்டபடியால் முறைப்படி முதல் மனைவியான கிரகலட்சுமியிடம் இருந்து விவகாரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குத் தொடர்பாக கிரகலட்சுமி, வேணுபிரசாத் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது கிரகலட்சுமி சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதி தேவதாஸ், வரும் ஆகஸ்ட் 24ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதற்கிடையே கிரஹலட்சுமியிடம் இருந்து விவகாரத்து கோரி பிரஷாந்த் தாக்கல் செய்த வழக்கு வரும் ஆகஸ்ட் 3ம் தேதி விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X