கிராமி விருதுகள் 2021: ரெக்கார்டு ஆஃப் தி இயர் விருதை தட்டிச்சென்றது எவ்ரிதிங் ஐ வாண்டட்!
சென்னை: 2021ஆம் ஆண்டுக்கான ரெக்கார்டு ஆஃப்தி இயர் கிராமி விருதை பில்லி எல்லிஷின் எவ்ரிதிங் ஐ வாண்ட்டட் ஆல்பம் தட்டிச் சென்றுள்ளது.
உலக அளவில் இசைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெறும் இந்த விழாவில் இசைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறந்த முறையில் பங்காற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

ஜனவரியில் நடத்த திட்டம்
கடந்த ஆண்டு ஜனவரி இறுதியில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல், இந்த ஆண்டுக்கான கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஜனவரி 31-ம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது.

லாஸ் ஏஞ்சல்ஸில்..
ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விருது வழங்கும் விழா தாமதமாகி தற்போது நடைபெற்றுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ட்ரேவோர் நோவா தொகுத்து வழங்கினார்.

சோஷியல் டிஸ்டன்ஸிங்
இரவு முழுக்க நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பங்கேற்ற பிரபலங்களும் சோஷியல் டிஸ்டன்ஸிங்கை பின்பற்றி அமர்ந்திருந்தனர்.

எவ்ரிதிங் ஐ வாண்ட்டட்
இதில் ரெக்கார்டு ஆஃப் தி இயர் விருதை பில்லி எல்லிஷின் எவ்ரிதிங் ஐ வாண்ட்டட் ஆல்பம் பெற்றது. இந்த ஆண்டுக்கான சிறந்த ஆல்பம் விருதை, டெய்லர்ல ஸ்விஃப்ட்டின் ஃபோக்லோரே ஆல்பம் பெற்றது. இதேபோல் பெஸ்ட் ஆர் அன்ட் ப பர்ஃபாமன்ஸுக்கனா விருதை பெயோன்ச்சின் பிளாக் பரேட் ஆல்பம் தட்டிச் சென்றது.

பெஸ்ட் ராப் பாடல்
பெஸ்ட் பாப் வோகல் ஆல்பத்திற்கான விருதை டுயூவ லிபாவின் ஃபியூட்சர் நாஸ்டல்ஜியா பெற்றது. பெஸ்ட் ராப் பாடலுக்கான விருதை மேகனின், சாவேஜ் பாடல் பெற்றது. ஆண்டின் சிறந்த பாடலுக்கான விருதை ஹெச்இஆரின் ஐ கான்ட் பிரீத் பாடல் பெற்றுள்ளது.

சிறந்த சோலோ பர்ஃபாமன்ஸ்
சிறந்த நகர்புற ஆல்பத்துக்கான விருதை பேட் பண்ணியின் YHLQMDLG ஆல்பம் பெற்றுள்ளது. சிறந்த மெல்லிசை ராப் பர்ஃபாமன்ஸுக்கான கிராமி விருது ஆண்டர்ஸன் பாக்கின் லாக்டவுன் ஆல்பம் பெற்றுள்ளது. பெஸ்ட் பாப் சோலோ பர்ஃபாமன்ஸுக்கான விருதை வாட்டர் மிலன் ஆல்பத்துக்காக ஹாரி ஸ்டைல்ஸ் பெற்றுள்ளார்.

சிறந்த புதிய முகம்
நாட்டின் சிறந்த ஆல்பத்துக்கான விருதை மிராண்டா லாம்பெர்ட்டின், வைல்டுகார்ட் பெற்றிருக்கிறது. சிறந்த புதிய முகத்துக்கான கிராமி விருதை மேகன் தி ஸ்டாலியன் பெற்றுள்ளார். கிளாஸிக்கல் அல்லாத ஆல்பத்திற்கான சிறந்த தயாரிப்பாளர் விருதை ஆண்ட்ருயூ வாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த ராக் ஆல்பம்
நாட்டின் சிறந்த பாடலுக்கான விருது தி ஹைவுமனின் க்ரவுடட் டேபிள் பாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் சிறந்த சோலோ பர்ஃபாமன்ஸுக்கான விருதை வின்சின் கில்லின் வென் மை ஏமி பிரேயர்ஸ் ஆல்பம் பெற்றுள்ளது. சிறந்த ராக் ஆல்பத்திற்கான விருதை தி ஸ்ட்ரோக்ஸின் தி நியூ அப்நார்மல் ஆல்பம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











