32 கிராமி விருதுகள் வென்று சாதனை படைத்த பாடகி... இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ரிக்கி கேஜ்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: சர்வதேச அளவில் இசைத்துறையில் சிறந்து விளங்கும் இசை கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன.
1959 முதல் ஒவ்வொரு வருடமும் இந்த விருது நிகழ்ச்சி நடைபெறும் நிலையில், இன்று 65வது கிராமி விருதுகள் விழா நடந்து முடிந்தது.
இந்த விழாவில் அமெரிக்க பாடகி பியான்சே 32வது முறையாக கிராமி விருது வென்று சாதனை படைத்துள்ளார்.
அதேபோல், பிரபல இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக விருது வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்

சாதனை படைத்த பியான்சே
உலகளவில் இசைத்துறையின் மிக உயரிய அங்கீகாரமான கிராமி விருதுகள் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. 65வது கிராமி விருது விழாவான இதில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகி பியான்சே 32வது முறையாக கிராமி விருது வென்று சாதனை படைத்துள்ளார். சிறந்த நடனம, எலெக்ட்ரானிக் ரெக்கார்டிங் பிரிவில் பியான்சே விருது வென்றுள்ளார். அவரது Break my soul என்ற பாடல் விருதை வென்றுள்ளது. மேலும் சிறந்த எலெக்ட்ரானிக் மியூசிக் ஆல்பம் பிரிவில் பியான்சேவின் Renaissance ஆல்பமும், பெஸ்ட் ட்ரெடிஷனல் ஆர் அண்ட் பி பெர்ஃபாமென்சில் அவரது Plastic off the sofa பாடலும் கிராமி விருதை வென்று அசத்தியுள்ளன. .

மொத்தம் 32 விருதுகள்
அதேபோல், சிறந்த ஆர் அண்ட் பி பாடலுக்கு Cuff it பாடலை பாடியதற்கும், அந்தப் பாடல் வரிகளுக்காகவும் மேலும் ஒரு கிராமி விருதை வென்றுள்ளார் பியான்சே. அதனை மற்ற பாடகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கத இதன்மூலம் இதுவரை மொத்தம் 32 கிராமி விருதுகளை வென்று, வரலாற்றில் அதிகமான விருதுகளை வென்றவர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் பியோன்சே. இந்தாண்டுக்கான கிராமி விருதுகளில் ஹாரி ஸ்டைல்ஸ், டைலர் ஸ்விஃப்ட் உள்ளிட்ட பலரது ஆல்பங்களும் கிராமி விருதை பெற்றுள்ளன.

மூன்றாவது விருது வென்ற ரிக்கி கேஜ்
65வது கிராமி விருது விசாவில் பிரபல இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்ஜும் விருது வென்று அசத்தியுள்ளார். இது அவரது 3வது கிராமி விருது என்பது மிக முக்கியமானது. இந்தியர் ஒருவர் மூன்று கிராமி விருது வென்றது இதுவே முதன்முறையாகும். Divine Tides என்ற ஆல்பத்திற்காக கிராமி விருது வென்றுள்ளார் ரிக்கி கேஜ். தி போலீஸ் என்ற பிரிட்டிஷ் ராக் இசைக் குழுவை சேர்ந்த டிரம் வாசிப்பாளரான ஸ்டூவர்ட் கோப்லேண்ட் உடன் இந்த விருதினை பகிர்ந்து கொண்டுள்ளார் அவர். ரிக்கி கேஜ்ஜுடன் ஸ்டூவர்ட் என்பவரும் இந்த ஆல்பத்தில் இணைந்து பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து
அமெரிக்காவில் பிறந்த ரிக்கி கேஜ் படித்து வளர்ந்தது எல்லாம் பெங்களூருவில் தான். பல் மருத்துவத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், இந்துஸ்தானி இசையின் மீது கொண்ட ஆர்வத்தால் இசைத்துறையில் பயணிக்க ஆரம்பித்தார். 2015ல் வோடர் கெல்லர்மே என்ற தென் ஆப்பிரிக்க இசைக் கலைஞரோடு இணைந்து இவர் உருவாக்கிய Winds of Samsara என்ற இசை ஆல்பத்துக்காக கிராமி விருது வென்றிருந்தார். பெஸ்ட் நியூ ஏஜ் ஆல்பம் பிரிவில் இந்த இருது ரிக் கேஜ்ஜுக்கு கிடைத்தது. அதேபோல் 2022ம் ஆண்டிலும் கிராமி விருதை வென்றுள்ளார் ரிக்கி கிரேஜ். இதனையடுத்து ரிக்கி கேஜுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கு சமர்ப்பணம்
இந்நிலையில், மூன்றாவது முறையாக கிராமி விருது வென்றது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரிக்கி கேஜ். அதில், "இப்போதுதான் எனது மூன்றாவது கிராமி விருதைப் பெற்றுள்ளேன். நன்றிகள். வார்த்தைகள் இல்லாமல் தடுமாறி நிற்கிறேன். இந்த விருதை இந்தியாவுக்கு சமர்ப்பிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். ரிக்கி கேஜ்ஜின் டிவைன் டைட்ஸ் ஆல்பத்தில் 9 பாடல்களும், 8 இசை வீடியோக்களும் உள்ளன. முன்னதாக இந்தியாவில் இருந்து பண்டிட் ரவிசங்கர், தபேலா இசை மேதை ஜாகிர் ஹுசைன், தமிழ்நாட்டைச் சேர்ந்த கடம் வித்வான் விக்கு விநாயகராம், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் ஆகியோர் கிராமி விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











