Don't Miss!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
மூன்றாவது முறையாக கிராமி விருது வென்ற பிரபல இந்திய இசையமைப்பாளர்... பிரபலங்கள் வாழ்த்து!
லாஸ் ஏஞ்சல்ஸ்: இசைத் துறையில் உயரிய விருது விழாவான கிராமி அவார்ட்ஸ் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
65வது கிராமி விருது விழாவான இதில் இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் 3வது முறையாக கிராமி விருதை வென்றுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த ரிக்கி கேஜ், டிவைன் டைட்ஸ் என்ற ஆல்பத்துக்காக கிராமி விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
விருது வென்ற ரிக்கே கேஜ் அவரது குழுவினருடன் போட்டோ எடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
வாத்தி இசை வெளியீட்டு விழாவில் மகன்களுடன் ஆஜரான தனுஷ்... வேஷ்டி சட்டையில் சும்மா தாறுமாறு!
65வது கிராமி விருதுகள்
இசைத்துறையின் மிக உயரிய விருதான கிராமி விருதுகள் இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. 65வது கிராமி விருது விழாவான இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த இசையமைப்பாளர்கள், இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பல பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டுக்கான கிராமி விருதுகள் இன்று வழங்கப்பட்டன, அதில் இந்திய இசையமைப்பாளர் ரிக்கே கேஜ் புதிய சாதனை படைத்துள்ளார்.
3வது முறையாக கிராமி விருது
பெங்களூருவைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் 3வது முறையாக கிராமி விருதை வென்றுள்ளார். லாஸ் ஏஞ்செல்ஸில் நடந்த விழாவில் தனது டிவைன் டைட்ஸ் ஆல்பத்துக்காக ரிக்கி கேஜ் இந்த கிராமி விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 'டிவைன் டைட்ஸ் வித் ராக் - லெஜெண்ட் கோப்லேண்ட்' என்ற ஆல்பத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மூன்றாவது முறையாக கிராமி விருது வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை ரிக்கி கேஜுக்கு கிடைத்துள்ளது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக விருது
முன்னதாக ரிக்கி கேஜ் கடந்த 2015ம் ஆண்டு கிராமி விருது வென்றிருந்தார். அதன்பின்னர் 2022ம் ஆண்டும் கிராமி விருதை வென்றார். இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக ரிக்கி கேஜ் கிராமி விருதை வென்றுள்ளார். 2022, 2023 என தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ரிக்கி கேஜ் கிராமி விருது வென்றது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விருதுடன் போட்டோ வெளியிட்ட ரிக்கி கேஜ்
3வது முறையாக கிராமி விருது வென்ற ரிக்கி கேஜ், விருதுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் தனது குழுவைச் சேர்ந்த ஸ்டீவர்ட் கோப்லேண்ட், ஹெர்பர்ட் வால்ட் ஆகியோரும் ரிக்கி கேஜுடன் உள்ளனர். இதனிடையே Best Immersive Audio Album என்ற கேட்டகரியில் ரிக்கி கேஜ் விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்