தியேட்டரில் படம் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த வாலிபர் மரணம்

By Siva

மும்பை: மும்பையில் கிராண்ட் மஸ்தி இந்தி படம் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த வாலிபர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

மும்பை வசாய் பகுதியைச் சேர்ந்தவர் மங்கேஷ் போகல்(22). அவர் தனது காதலியுடன் கிராண்ட் மஸ்தி இந்தி படம் பார்க்க தியேட்டருக்கு சென்றார். படத்தில் ஏராளமான காமெடி காட்சிகள் உள்ளன. அவற்றை பார்த்த மங்கேஷ் விழுந்து விழுந்து சிரித்துள்ளார்.

சிரித்துக் கொண்டிருக்கையிலேயே அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை வசாயில் உள்ள கார்டினல் கிராசியாஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மங்கேஷ் படத்தை பார்த்து பயங்கரமாக சிரித்ததாக அவர் அருகில் அமர்ந்திருந்தவர்கள் தெரிவித்தனர். சிரித்து சிரித்து ஒருவர் மரணம் அடைந்தது தியேட்டரில் இருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஹிட் படம்

ஹிட் படம்

கிராண்ட் மஸ்தி கடந்த 2004ம் ஆண்டு வெளியான மஸ்தியின் இரண்டாம் பாகம் ஆகும். இந்த படத்தில் அதிகம் 'ஏ' ஜோக்குகள் உள்ளன. இந்த வகையான ஜோக்குகள் பலருக்கு பிடிக்காவிட்டாலும் படம் ஹிட்டாகிவிட்டது.

விவேக் ஓபராய்

விவேக் ஓபராய்

கிராண்ட் மஸ்தியில் விவேக் ஓபராய், ரித்தேஷ் தேஷ்முக், அஃப்தாப் ஷிவ்தசானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விமர்சகர்கள்

விமர்சகர்கள்

கிராண்ட் மஸ்தியை விமர்சகர்கள் காரித் துப்பினாலும் படம் கோடி கோடியாக கல்லா கட்டியுள்ளது.

3ம் பாகம்

3ம் பாகம்

மஸ்தியின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் திட்டமும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X