twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    102 வயது தேவதை- பழம்பெரும் நடிகை ஸோஹ்ரா ஷேகல் மரணம்

    |

    டெல்லி: இந்தியாவின் பழம்பெரும் நடிகை மற்றும் டிவி நட்சத்திரமான ஸோஹ்ரா ஷேகல் நேற்று மரணமடைந்தார்.

    இதய நோயால் அவதிக்கு உள்ளாகி வந்த 102 வயதான ஷேகல், தெற்கு டெல்லியின் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் கடந்த புதனன்று நிமோனியாவால் பாதிப்படைந்த ஷேகல் நெஞ்சுவலியினால் நேற்று மாலை 4.30 மணியளவில் உயிரிழந்தார்.

    பாலிவுட் வாரிசு:

    பாலிவுட் வாரிசு:

    பாலிவுட்டின் வாரிசு என்று அழைக்கப்பட்ட ஷேகல், முதன்முதலாக சேன்னி கும் அண்ட் சவார்யா என்ற படத்தில் நடித்திருந்தார்.

    எட்டுத் தலைமுறைகள்:

    எட்டுத் தலைமுறைகள்:

    கிட்டதட்ட எட்டு தலைமுறைகளை திரைத்துறையில் கண்டுள்ள ஷேகல், ஹாலிவுட் படங்களில் கூட நடித்துள்ளார்.

    ஒடிசி கலைஞர்:

    ஒடிசி கலைஞர்:

    அவரது மகள் கிரண் ஷேகல் இவரைப் போலவே ஒரு சிறந்த ஒடிசி நடனக் கலைஞர். 1994 ஆம் ஆண்டு கேன்சரால் பாதிக்கப்பட்ட ஷேகல் அதிலிருந்து மீண்டு வந்தார்.

    திரை வாரிசு விருது:

    திரை வாரிசு விருது:

    2008 ஆம் ஆண்டில் "இந்த நூற்றாண்டின் திரை வாரிசு" என்ற விருதினை யுஎன்பிஎப் என்ற அமைப்பின் லாட்லி மீடியா விருதுகள் நிகழ்ச்சியில் பெற்றார்.

    நாட்டியத்தில் ஈர்ப்பு:

    நாட்டியத்தில் ஈர்ப்பு:

    சிறுவயது முதலேயே நாட்டியத்தில் ஈர்ப்புடைய ஷேகல், உதய் சங்கருடன் 1935இல் இருந்து இணைந்து பல நாட்டிய நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.

    காமேஷ்வருடன் திருமணம்:

    காமேஷ்வருடன் திருமணம்:

    அதன்பின்னர் அல்மோராவிற்கு சென்ற ஷேகல் அங்கு பிரபல ஓவியரும், நடனக்கலைஞருமான காமேஷ்வர் ஷேகலை மணம் புரிந்து கொண்டார்.

    இந்திய சினிமாவின் லெஜண்ட்:

    இந்திய சினிமாவின் லெஜண்ட்:

    இந்திய சினிமாவின் அனுபவசாலியாக கருதப்படும் ஷேகல், கிட்டதட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவருடைய நடிப்பில் சிறப்பானதாக பாஜி ஆன் தி பீச், ஹும் தில் தே சனம், தில் சே ஆகிய படங்கள் அமைந்திருந்தன.

    சீரியல்களிலும் நடிப்பு:

    சீரியல்களிலும் நடிப்பு:

    1960இல் வெளிவந்த படோசி என்ற டிவி சீரியலிலும் ஷேகல் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

    மீண்டும் ஷேகல்:

    மீண்டும் ஷேகல்:

    1982 இல் லண்டனின் குடியமர்ந்த ஷேகல், 1990இல் தன்னுடைய 80ஆவது வயதில் மீண்டும் இந்தியா திரும்பினார். ஆனாலும், தன்னுடைய திரைத் தாகத்தை முடித்துக் கொள்ளாத அவர் மீண்டும் பல தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார்.

    விருதுகள் சங்கமம்:

    விருதுகள் சங்கமம்:

    1998 ஆம் ஆண்டில் இந்தியாவின் உயரிய விருதான பத்ம ஸ்ரீயினைப் பெற்றுள்ளார். காளிதாஸ் சமான் விருதினை 2001 ஆம் ஆண்டில் பெற்றுள்ளார். 2010 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதினைப் பெற்றார்.

    அஞ்சலி செலுத்துவோம்:

    அஞ்சலி செலுத்துவோம்:

    ஏறக்குறைய இந்திய சினிமாவின் தலைமுறைகள் கண்ட மிகத்திறமை சாலியும், அனுபவமிக்கவருமான ஷேகல் என்ற மிகச் சிறந்த நடிகையின் மறைவுக்கு நம்முடைய அஞ்சலியைக் காணிக்கையாக்குவோம்.

    தமிழிலும் நடிப்பு:

    தமிழிலும் நடிப்பு:

    மறைந்த ஷேகல், தமிழில் சூப்பர் ஸ்டாரின் தளபதி படத்திலும், இந்தியில் இருந்து தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ஷாருக்கானின் உயிரே படத்திலும் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    Veteran film actress, theatre and TV personality Zohra Sehgal passed away today. A heart patient, Sehgal was admitted to the Max Hospital in south Delhi's Saket area after being diagnosed with pneumonia on Wednesday. She died of a heart attack at 4.30 pm on Thursday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X