பேயைவிட பயங்கரமானவள் பெண்.. நடிகை சோனியா அகர்வால் பேச்சு !

சென்னை : பேயைவிட பயங்கரமானவள் பெண் என்று நடிகை சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார்.

திகிலூட்டும் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷிஜின்லால் எஸ்எஸ் இயக்கி உள்ளார்.

கிராண்மா படத்தில், விமலா ராமன் மற்றும் சார்மிளா மற்றும் குழந்தை நட்சத்திரமான பௌர்ணமி ராஜ் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர்.

மறக்க முடியாத அனுபவம்

மறக்க முடியாத அனுபவம்

கிராண்மா திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில்,பேசிய சோனியா அகர்வால், கிராண்மா திரைப்படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். கிராண்மா என்ற தலைப்பிற்கும் எனது கதாபாத்திரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கதைப்படி அவர்கள் அப்படி பெயர் வைத்திருக்கிறார்கள்.

பெண் பயங்கரமானவள்

பெண் பயங்கரமானவள்

இது ஒரு பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய கதையாக இருந்ததால் எனக்கு இந்த கதை பிடித்திருந்தது. பிரபல கதாநாயகர்களுடன் நடிக்கும் போது நமக்கான பாத்திரத்தின் அளவு குறைவாக இருக்கும். இதுபோன்ற கதைகளை தேர்வு செய்து நடிக்கும் போது கதாபாத்திரத்தின் அளவு பெரியதாக இருக்கும் என்றார்.

பெண் பேயை விட பயங்கரமானவள்

பெண் பேயை விட பயங்கரமானவள்

இந்த கிராண்மா படம் அனைவரும் பார்க்கும் படமாக இருக்கும். இது திகில் படமா? பேய்ப் படமா? என்றெல்லாம் சிலர் கேட்கிறார்கள். பேய் என்றால் அபாயகரமானது பயங்கரமானது என்று நினைக்கிறார்கள். ஆனால் பெண் என்பவள் பேயை விட பயங்கரமானவள் என்று பலருக்கும் தெரிவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் பலசாலி, ஒவ்வொரு பெண்ணும் சக்தி வாய்ந்தவள்.. ஒவ்வொரு பெண்ணும் சவால்களைக் கடந்து தான், தனது வாழ்க்கையில் மேலே வருகிறாள். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை உடனே சுட்டுக்கொல்ல வேண்டும் என்றார்.

ஆசிரியராக

ஆசிரியராக

கிராண்மா திரைப்படம், தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில், சோனியா அகர்வால், ஆசிரியராக நடித்துள்ளார். விமலா ராமன் வழக்கறிஞராகவும், சார்மிளா பாட்டியாகவும், மலையாள நடிகர் ஹேமந்த் மேனன் வில்லனாக நடிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரின் அசோசியேட் யஷ்வந்த் பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு செல்லக்குட்டியே என்ற யூடியூப் பாடலின் மூலம் பிரபலமான ஜெசின் ஜார்ஜ் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X