'கிராண்மா ' ஒரு புது ரக ஹாரர் படம்... மிகுந்த பொருட்செலவில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்
சென்னை : எத்தனையோ பேய் படங்கள் , திகில் படங்கள் வந்திருந்தாலும் அவற்றின் தரம் என்னவோ உள்ளூர் நிலையில்தான் இருக்கும்.
ஹாலிவுட்டுக்கும் நமக்கும் தர வித்தியாசம் நெடுந்தொலைவு இருப்பதை நம்மால் உணர முடியும் .இந்த நிலையில் ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் 'கிராண்மா' என்கிற பெயரில் உருவாகியுள்ளது.
இப்படத்தை ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார்.பிரதானமான பாத்திரங்களில் சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா நடித்துள்ளனர்.

மிகுந்த பொருட்செலவில்
மலையாளப் படங்களில் நாயகன் வேடங்களில் நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் பௌர்ணமிராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது .இதன் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் வரவேண்டும் என்பதற்காக மிகுந்த பொருட்செலவில் காட்சிகளை உருவாக்கியுள்ளனர்.

சோனியா அகர்வால் சண்டை
கதையிலும் காட்சியமைப்பிலும் மனம் கவரப்பட்ட சோனியா அகர்வால் ,சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து படக்குழுவினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். இப்படத்தை GMA பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராஜ் ஆர், விநாயகா சுனில் தயாரித்துள்ளனர்.ஒட்டு மொத்த குழுவும் இந்த படத்திற்காக நீண்ட எதிர்பார்ப்பில் உள்ளனர் .

ஷிபின் இயக்கத்தில்
இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இருப்பவர் ஷிபின். படத்திற்கு ஒளிப்பதிவு - யஸ்வந்த் பாலாஜி .கே , எடிட்டிங் - அஸ்வந்த் ரவீந்திரன், இசை- சங்கர் ஷர்மா, ஒப்பனை - அமல் தேவ், வசனம் தயாரிப்பு வடிவமைப்பு- அப்துல் நிஜாம்,ஸ்டண்ட் - முகேஷ் ராஜா,சினிமா மீது தாகம் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகி உள்ளது. திகில் பட ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் 'கிராண்மா' விரைவில் திரையில் ரசிகர்களைப் பயமுறுத்த வருகிறது.

ஆடியன்ஸ் பல்ஸ்
எத்தனையோ பேய் படங்கள் வரிசைகட்டி தமிழ் சினிமாவில் வந்து கொண்டே தான் இருக்கின்றது .அத்தனை படங்களும் மக்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. ஒரு சில குறிப்பிட்ட படங்கள் மட்டும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் மட்டுமல்லாமல் சுவாரசியமான திரைக்கதை மூலம் ஆடியன்ஸ் பல்ஸ் புரிந்து எடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட படங்களில் ஒன்றாக கிராண்மா கண்டிப்பாக இருக்கும் என்று இயக்குனரும் படத்தின் தயாரிப்பாளரும் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் கிராண்மா எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை.


Click it and Unblock the Notifications