என்.ஜி.கே. மேனரிசம் செய்து செல்வராகவனுக்கே கெத்து காட்டிய பாட்டி: வைரல் வீடியோ

By Siva

Recommended Video

NGK: Selva Raghavan Speech: சூர்யா நடிகராக கிடைத்தது ஒரு வரம்- வீடியோ

சென்னை: ஒரு பாட்டி என்.ஜி.கே. மேனரிசம் செய்யும் டிக்டாக் வீடியோ செல்வராகவனை வியக்க வைத்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான என்.ஜி.கே. படம் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் தான் வெற்றி நடை. பிற மாநிலங்களில் என்.ஜி.கே.வுக்கு சுமாரான ஆதரவே கிடைத்துள்ளது.

Granny impresses Selvaraghavan

காரணம் படத்தின் கதை யாருக்கும் புரியவில்லையாம். கேரளாவில் சூர்யா சேட்டனுக்காக தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள், ரசிகைகள் கதை புரியவில்லை என்று கூறி புலம்பியுள்ளனர்.

இந்நிலையில் ஒரு பாட்டியும், பேரனும் சேர்ந்து டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் அந்த இருவரும் என்.ஜி.கே. படத்தில் சூர்யா செய்யும் மேனரிசத்தை செய்துள்ளனர். பேரனை விட பாட்டி மாஸ் காட்டி நெட்டிசன்களை கவர்ந்துவிட்டார்.

அந்த வீடியோவை பலரும் ட்விட்டரில் ஷேர் செய்து வருகிறார்கள். இந்நிலையில் அந்த வீடியோ செல்வராகவன் கண்ணில் பட அவரோ அதை பார்த்து ரசித்துவிட்டு வாவ் என்று கமெண்ட் போட்டுள்ளார்.

என்.ஜி.கே. படத்தை கழுவிக் கழுவி ஊத்துவோர் ஊத்தினாலும் பாராட்டுபவர்கள் பாராட்டத் தான் செய்கிறார்கள். அப்படி என்.ஜி.கே. படத்திற்கு ஆதரவளித்துள்ளவர்களுக்கு செல்வராகவன் நன்றி தெரிவித்துள்ளார்.

என்.ஜி.கே. படம் யாருக்கு பிடித்துள்ளதோ இல்லையோ சூர்யா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. எந்த அளவுக்கு பிடித்துள்ளது என்றால் இரண்டாம் பாகம் கேட்கும் அளவுக்கு பிடித்துள்ளது.

சூர்யா ரசிகர்கள் என்.ஜி.கே. 2 வேண்டும் என்று ட்விட்டரில் கோரிக்கை விடுத்து வருவதை பார்த்த பிற ரசிகர்களோ அடப்பாவிகளா, உங்க பாசத்திற்கு ஒரு அளவே இல்லையா. என்.ஜி.கே. படத்தையே பார்க்க முடியவில்லை இதில் இரண்டாம் பாகம் வேறு கேட்கிறீர்களே என்று விமர்சித்துள்ளனர்.

செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க 19 ஆண்டுகளாக காத்திருந்ததாக ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் சூர்யா தெரிவித்தார். இந்நிலையில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று செல்வராகவனும், சூர்யாவும் மீண்டும் சேர்ந்து பணியாற்றுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். காத்திருப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X