ஃப்ரெண்ட்ஷிப் ஆந்த்தமில் பங்கேற்கணுமா.. அப்போ வாணி போஜன் சொல்றத கேளுங்க?

ஓ மை கடவுளே படத்தில் இடம்பெற்றுள்ள ஃப்ரெண்ட்ஷிப் ஆந்தம் லிரிக் வீடியோ விரைவில் வெளியாகவுள்ளது. அந்த லிரிக் வீடியோவில், நீங்களும் உங்கள் நண்பர்களும் எப்படி பங்கேற்பது என்பதனை நடிகை வாணி போஜன் தனது ட்வி

சென்னை: சின்னத்திரை நயன்தாரா என செல்லமாக அழைக்கப்பட்டு வரும் நடிகை வாணி போஜன், ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

அசோக் செல்வன், ரித்திகா சிங், விஜய்சேதுபதி, ஷாரா, வாணி போஜன் என பலர் நடித்துள்ள ஓ மை கடவுளே படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Great chance to participate in OMK Friendship Anthem

அடுத்ததாக படத்தில் இடம்பெற்றுள்ள ஃப்ரெண்ட்ஷிப் ஆந்தம் விரைவில் வெளியாகவுள்ளதாக நடிகை வாணி போஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் அறிவித்துள்ளார்.

நீங்களும் உங்கள் நண்பர்களும் குழுவாக எடுத்துக் கொண்ட வித்தியாசமான புகைப்படங்களை #omkfriendshipanthem என்ற ஹேஷ்டேகில் ஷேர் செய்தால், அந்த புகைப்படங்களில் தேர்ந்தெடுக்கும் புகைப்படங்கள் ஓ மை கடவுளே படத்தில் இடம்பெற்றுள்ள ஃப்ரெண்ட்ஷிப் ஆந்தம் லிரிக் வீடியோவில் ஒளிபரப்பு செய்யப்படும் என வாணி போஜன் தெரிவித்துள்ளார்.

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள ஓ மை கடவுளே படத்தை அஷ்வத் மாரி முத்து இயக்கியுள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையில் ரொமான்டிக் ஆல்பம் உருவாகியுள்ள நிலையில், நட்புக்கான ஒரு ஆந்தமும் இசையமைத்துள்ளார் லியோன் ஜேம்ஸ்.

இந்த படத்தில் அசோக் செல்வனின் முன்னாள் காதலியாக அறிமுகமாகிறார் வாணி போஜன். அதேபோன்று தெலுங்கில் விஜய்தேவரகொண்டா தயாரிப்பில் உருவாகியுள்ள ஒரு படத்திலும் நாயகியாக வாணி போஜன் அறிமுகமாகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X