போஸ்டருடன் முடிந்து போன பிரபலங்களின் திரைப்படங்கள்!

By Mayura Akilan

சில இயக்குநர்கள் நடிகர்களின் படங்கள் பிரம்மாண்டமான போஸ்டருடன் தொடங்கும். பூஜை போட்டு பிரம்மாண்டமாக விளம்பரம் செய்வார்கள் ஆனால் வருமா? வராதா? எப்ப வரும் ஏங்க வைத்து கடைசியில் கடையை மூடி விடுவார்கள்.

ரஜினி, கமலும் இதற்கு விதிவிலக்கல்ல. பிரம்மாண்டமாக எதிர்பார்க்கப்பட்ட மருதநாயகம், ராணா போன்ற படங்களும் பூஜையுடன் நின்று போனது.

அதேபோல் இன்றைய இளம் ஹீரோக்களான சிம்பு, தனுஷ் படங்களும் கூட போஸ்டருடன் நின்று போயிருக்கிறது. எதிர்பார்ப்பை கிளப்பி கடைசியில் ரசிகர்களை ஏமாற்றிய அந்த படங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

கமலின் மருதநாயகம்

கமலின் மருதநாயகம்

உலகநாயகன் கமல்ஹாசனின் கனவுப் படம் மருதநாயகம். ராணி எலிசபெத் வந்து பூஜை போட்டு தொடக்கி வைத்தார். கடைசியில் பொக்ரான் அணுகுண்டு சோதனையால் படம் நின்று போனதாம். கடைசி வரைக்கும் கமலுக்கு அது கனவாகவே போய்விடும் போலிருக்கிறது.

ரஜினியின் ராணா

ரஜினியின் ராணா

கம்பீரமான போஸ்டருடன் பூஜைப்போடப்பட்டது ராணா. இந்தி நடிகை தீபிகா படுகோனே இதில் நடிப்பதாக இருந்தது. பூஜை போட்ட கையோடு ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே அப்படியே நிற்கிறது படம். அதன்பிறகு கோச்சடையான் படத்தைக்கூட முடித்துவிட்டார் ரஜினி.

விக்ரமின் கரிகாலன்

விக்ரமின் கரிகாலன்

விக்ரம் நடிக்கும் சரித்திரம் படம் என்று அறிவிக்கப்பட்ட கரிகாலன் படம் கடைசியில் போஸ்டருடன் நின்று போனதுதான் சோகம்.

தல அஜித் மிரட்டல்

தல அஜித் மிரட்டல்

தீனா படத்திற்குப் பின்னர் தல அஜீத் உடன் ஏ.ஆர். முருகதாஸ் இணைய இருந்த படம் மிரட்டல். ஆனால் போஸ்டர் மட்டும்தான் மிரட்டியது. படம் காணாமல் போய்விட்டது. அதற்கு பதிலாக இப்போது வினய் நடித்த மிரட்டல் வெளிவந்து கடைசியில் ஓடியே போய்விட்டது.

விஜய் – யோகான் அத்தியாயம் ஒன்று

விஜய் – யோகான் அத்தியாயம் ஒன்று

இயக்குநர் கவுதம் மேனன் விஜயுடன் இணைவதாக இருந்த படம் யோகான் அத்தியாயம் ஒன்று. போஸ்டர் எல்லாம் பிரம்மாண்டமாக இருந்தது என்ன காரணமோ தெரியவில்லை படம் வெளிவராமலேயே போய்விட்டது.

சூர்யா- சென்னையில் ஒரு மழைக்காலம்

சூர்யா- சென்னையில் ஒரு மழைக்காலம்

இதுவும் கவுதம் மேனன் படம்தான். சூர்யாவுடன் நான்கு புதிய முகங்கள், திரிஷா என போஸ்டர் கலக்கியது. கடைசியில் படம் வராமலேயே போய்விட்டது. ஆனால் படம் வராவிட்டாலும் சென்னையில் நல்ல முறையில் மாதம் மும்மாரி மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது.

கெட்டவன் சிம்பு

கெட்டவன் சிம்பு

சிம்பு-லேகா வாஷிங்டன் உடன் நடிக்க இருந்த கெட்டவன் படத்தில் செம கெட்டப்பில் இருந்தால் சிம்பு. கடைசியில் படம் வராமலேயே போய்விட்டது. ஒருவேளை படம் எப்போது வரும் என்பது அந்த சிம்புவுக்குத்தான் வெளிச்சம்.

தனுஷ் – செல்வராகவன்

தனுஷ் – செல்வராகவன்

செல்வராகவன் படத்தில் தனுஷ் நடிப்பதாக இருந்த இது மாலை நேரத்து மயக்கம் படம் பயங்கர எதிர்பார்ப்புடன் தொடங்கியது. கடைசியில் இருவருமே பிஸியாகிவிட படம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. எப்போது தூசி தட்டுவார்கள் என்று தெரியவில்லை.

போஸ்டருடன் காணமல் போன படங்கள் என்றால் மிகப்பெரிய லிஸ்ட்டே போடலாம் இந்த படங்கள் சாம்பிள்தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X