'ரஜினி முருகனுக்கு' பச்சைக்கொடி காட்டிய சூப்பர் ஸ்டார்!

By Mayura Akilan

சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள 'ரஜினி முருகன்' படத் தலைப்புக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 30ல் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர்கள் தரப்பு அறிவித்துள்ளது.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படக்குழு மீண்டும் இணைந்து படம் பண்ண தீர்மானித்தது. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. படத்திற்கு 'ரஜினி முருகன்' என்ற தலைப்பை முடிவு செய்திருக்கிறார்கள்.

ரஜினியிடம் ஒப்புதல்

ரஜினியிடம் ஒப்புதல்

படத்தின் தலைப்பில் ரஜினி என்று இருப்பதால், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் ரஜினியிடம் ஒப்புதல் கேட்கப்பட்டது. தனக்கு எந்தவித ஆட்சோபினையும் இல்லை என்று தலைப்பிற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார் ரஜினி.

வழக்கு போட்ட ரஜினி

வழக்கு போட்ட ரஜினி

முன்னதாக, 'மைன் கூன் ரஜினிகாந்த்' என்ற இந்தி படத்தலைப்பிற்கு ஆட்சேபம் தெரிவித்து ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தார். அதேபோல சிக்கல் வரக்கூடாது என்றுதான் முன்கூட்டியே முந்திக்கொண்டார் லிங்குசாமி.

காரைக்குடியில் சூட்டிங்

காரைக்குடியில் சூட்டிங்

'ரஜினி முருகன்' படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 30-ஆம் தேதி முதல் காரைக்குடியில் தொடங்க இருக்கிறது. இந்தப்படத்தை தயாரிக்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே இந்த தகவலை ட்விட்டர் மூலம் உறுதி செய்திருக்கிறது.

கீர்த்தி சுரேஸ்

கீர்த்தி சுரேஸ்

ரஜினி முருகனில் சிவாகார்த்திகேயனுக்கு ஜோடியாக மலையாள நடிகையான கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார்.

இமான் இசை

இமான் இசை

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மூலம் சூப்பர்ஹிட்டான பாடல்களை கொடுத்த இமான் தான் இந்தப்படத்திற்கும் இசையமைக்கிறார். மூவர் கூட்டணி இணைந்து மீண்டும் ஒரு கலக்கப் போகிறார்களாம்.

ரஜினி ரசிகர்

ரஜினி ரசிகர்

சிவகார்த்திக்கேயன் ஆரம்பத்தில் இருந்தே ரஜினி ரசிகராம். இந்த படத்திலும் ரசிகராகவே நடித்துள்ளாராம். சூப்பர்ஸ்டாரின் ஒப்புதலும் கிடைத்து விட்டதால் இரட்டிப்பு சந்தோசத்துடன் படப்பிடிப்புக்கு கிளம்ப தயாராகிவிட்டார் சிவகார்த்திக்கேயன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X