இளையராஜாவை பாராட்டும் இசைக் கலைஞர்கள்... அழைக்கும் தீனா

சென்னை: இளையராஜாவுக்கு நன்றி செலுத்துவது ஒவ்வொரு இசைக்கலைஞனின் கடமையாகும். அவருக்கு நடக்கும் பாராட்டு விழாவில் அனைத்து இசைக்கலைஞர்களும் கலந்துகொண்டு அவரை வாழ்த்துமாறு இசையமைப்பாளர் தீனா கேட்டுக்கொண்டுள்ளார்.

இசைஞானி இளையராஜா என்றாலே இசை, இசை என்றாலே இளையராஜா அவர்கள் தான், என்ற அளவிற்கு இந்த உலகையே தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்த மாமேதை. எந்த ஒரு உணர்வாக இருந்தாலும் எந்த நேரத்திலும் நமக்கு துணையாய் இருப்பது இசைஞானியின் இசையே.

Greet Ilayaraja with a heart-Composer Dhina

அன்னக்கிளியில் ஆரம்பித்த அவரது திரையுலக பயணம் இன்று மட்டுமல்ல, இந்த உலகம் உள்ள வரை அவரது இசை மூலம் நம்முடன் பயணித்துக்கொண்டே இருக்கும். அவரின் இந்த கலை சேவை பாராட்டுக்குரியது.

மதிப்பிற்குரிய இசைஞானி பத்மவிபூஷன் இளையராஜா அவர்களது கலைச் சேவையை பாராட்டி நன்றி தெரிவிக்கும் வண்ணம் செப்டம்பர் 1ஆம் தேதி ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி திரை இசைக் கலைஞர்கள் சங்கத்தில் காலை 11 மணிக்கு நடக்கவிருக்கிறது. அவருக்கு நன்றி செலுத்துவது ஒவ்வொரு இசைக்கலைஞனின் முதற்கண் கடமையாகும். இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு இசைஞானி இளையராஜாவை பாராட்டி வாழ்த்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மனதார வாழ்த்து தெரிவிக்குமாறு இசையமைப்பாளர் தினா அழைப்பு விடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X