twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவா படத்திலும் ஜி.எஸ்.டி வசனம் இருக்கு... கம்பெனி பேர்லயே கட்சியை கலாய்ச்ச 'வேலைக்காரன்'!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய 'வேலைக்காரன் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    வேலைக்காரன் படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சதிகளையும், அதற்கு பலியாகும் அப்பாவி நுகர்வோரையும் பற்றிப் பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

    ஊழியர்களின் உரிமையையும், அவர்களின் பலத்தையும், சில வசனங்களின் மூலம் இந்தப் படத்தில் எடுத்துக்காட்டி கைதட்டல்களை அள்ளியிருக்கிறார் சிவா.

    ஜி.எஸ்.டி வசனம்

    ஜி.எஸ்.டி வசனம்

    வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக ரோஹினி நடித்திருக்கிறார். மகனை பற்றி நயன்தாராவிடம் "முதல் மாச சம்பளத்திலேயே 5000 ரூபா கம்மியா தான் கொடுத்தான்" எனச் சொல்வார். அதற்கு சிவகார்த்திகேயன், "அத ஜி.எஸ்.டி கட்டிட்டேன்" என தனது பாணியில் நக்கல் அடிப்பார். இந்தக் காட்சிக்கு தியேட்டரில் விசில் பறந்தது.

    சாஃப்ரான்

    சாஃப்ரான்

    'வேலைக்காரன்' படத்தில் சிவகார்த்திகேயன் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் 'சாஃப்ரான்'. அந்த நிறுவனத்தை எதிர்த்துத்தான் சிவகார்த்திகேயன் வேலைக்காரர்களைத் திரட்டுவார். சாஃப்ரான் என்பது காவி நிறம் என்பதால் இதில் அந்தக் கட்சியைக் குறிப்பிட்டுத்தான் இப்படி வைத்திருக்கிறார்கள் என குறியீடு கண்டுபிடித்திருக்கிறார்கள் நெட்டிசன்ஸ்.

    கார்ப்பரேட்டுக்கு எதிராக

    கார்ப்பரேட்டுக்கு எதிராக

    கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக பயங்கரமாக வசனம் பேசுவார் சிவா. அரசுகளே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சார்பாக நடந்துகொள்லும் காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக மக்களை திருப்பும் நோக்கத்தில் எடுக்கப்பட்டதும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

    ரசிகர்கள் உற்சாகம்

    ரசிகர்கள் உற்சாகம்

    தொழிலாளிகளின் ஆற்றலையும், பலத்தையும் சிவகார்த்திகேயன் சொல்லும்போது தியேட்டரில் ரசிகர்கள் ஆரவாரம் செய்கிறார்கள். மக்களின் கார்ப்பரேட்டுக்கு எதிரான மனைநிலையை புரிந்து அதற்கேற்ப வசனங்களை வைத்திருக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா.

    English summary
    Sivakarthikeyan, Nayanthara starring 'Velaikkaran' film directed by Mohan Raja is running successfully in theaters. Sivakarthikeyan spoke about the conspiracy of corporates. Siva also spoke about the Central Government's GST tax in this film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X