சர்ச்சையில் சிக்கிய ரோகிணி தியேட்டர்… ஜிஎஸ்டி அதிகாரிகள் திடீர் ஆய்வு!
சென்னை : சென்னை கோயம்பேடில் உள்ள மிகவும் பிரபலமான திரையரங்கான ரோகிணி தியேட்டரில் ஜிஎஸ்டி அதிகாரிகள் நேற்று முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மெட்ரோ ரயில்நிலையம், கோயம்போடு மார்க்கெட் பகுதி அருகே உள்ளது ரோகிணி தியேட்டர். இந்த தியேட்டர் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், பல திரைப்பிரபலங்களுக்கும் பிடித்தமான தியேட்டராகும்.
இதில், விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயரவி, அருண்விஜய் என அனைத்து பிரபலங்களும் தங்களின் படம் வெளியானால் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களோடு ரசிகர்களாக இங்கு வந்து படம் பார்ப்பார்கள்.

ரோகினி தியேட்டர்
மிகவும் பிரபலமான இந்த தியேட்டர் கடந்த சில மாதங்களாக பிரச்சனை சந்தித்து வருகிறது. அண்மையில் வாரிசு, துணிவு திரைப்படம் ஒரே நேரத்தில் வெளியிட்டது. இதில்,அஜித், விஜய் ரசிகர்கள் இருவரும் ஒன்றாக திரண்டதால், இருரசிகர்களுக்கு இடையே மோதல் நடந்தது. இதில், தியேட்டரின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டன. இருரசிகர்களும் எல்லைமீறி வன்முறையில் நடந்து கொண்டதால், போலீசார் விரைந்து வந்து தடியடி நடத்தி இருதரப்பு ரசிகர்களையும் விரட்டி அடித்தனர்.

பரபரப்பான தியேட்டர்
அதுமட்டுமில்லாமல், ரோகிணி தியேட்டர் அருகிலேயே, துணிவு படம் பார்த்த மகிழ்ச்சியில், லாரி மீது ஏறி நடனமாடிய பாரத் என்கிற அஜித் ரசிகர் ஒருவர், லாரியில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்தார். இதனால், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அதிகாலை காட்சிகள் திரையிடப்படுவதை தடை செய்ய வேண்டும் என பலர் குரல் கொடுத்தனர்.

உரிமையாளர் மீது நடவடிக்கை
அதுமட்டுமில்லாமல், வாரிசு மற்றும் துணிவு படத்தை அனுமதியின்றி அதிகாலை 1 மணி மற்றும் 4 மணிக் காட்சிகள் திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இது ரோகிணி திரையரங்க உரிமையாளர்களுக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது.

திடீர் ஆய்வு
இந்த பிரச்சனையே இன்னும் தீராத நிலையில், ரோகிணி தியேட்டரில் ஜிஎஸ்டி அதிகாரிகள் நேற்றிரவு முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். திரையரங்கம் சம்பந்தமாக வாங்கப்பட்ட பொருட்களுக்கான வரி செலுத்துவதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரில் ஜிஎஸ்டி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











