twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜி.எஸ்.டி வரி குறைச்சதுக்கு விஜய்தான் காரணமா? - ரசிகர்கள் ட்வீட் #MersalEffect

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி தொடர்பான வசனங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. மத்திய அரசின் திட்டங்களை விமர்சித்ததால் பா.ஜ.க-வினர் மெர்சல் படத்துக்கு தடை கோரினர்.

    ரசிகர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் பா.ஜ.க-வினருக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். கருத்து சுதந்திரத்தில் தலையிடக் கூடாது என பா.ஜ.க-வினருக்கு அறிவுறுத்தினர்.

    இந்நிலையில், 178 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியைக் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வரிக் குறைப்புக்கு 'மெர்சல்' படம்தான் காரணம் என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

    ஜி.எஸ்.டி குறைப்பு

    ஜி.எஸ்.டி குறைப்பு

    ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்ட பிறகு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு விதமான பொருட்களின் வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அப்படித்தான் 23-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் அசாம் தலைநகரான கவுகாத்தியில் நேற்று நடைபெற்றபோது 178 பொருட்களுக்கான வரி விகிதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    மெர்சல் - ஜி.எஸ்.டி

    மெர்சல் - ஜி.எஸ்.டி

    ஜி.எஸ்.டி வரி பற்றிய வசனம் விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம் பெற்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்று நடந்த வரி குறைப்பு அறிவிப்பையும், மெர்சல் பட வசனத்தையும் முடிச்சு போட ஆரம்பித்துவிட்டார்கள் விஜய் ரசிகர்கள். இந்த வரி குறைப்புக்கு 'மெர்சல்' படத்தில் விஜய் பேசிய ஜி.எஸ்.டி வசனம் தான் காரணம் என சிலர் பதிவிட ஆரம்பித்துவிட்டார்கள்.

    மெர்சல் தான் காரணம்

    177 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பு. வட இந்தியர்கள் இதை குஜராத் தேர்தலுக்காக மாற்றப்பட்டதாக நினைப்பார்கள், ஆனால், ஒரு தென்னிந்தியரா இதற்கு உண்மையான காரணம் எனக்குத் தெரியும். மெர்சல் படத்தில் விஜய் பேசிய வசனங்கள்.

    விஜய் டயலாக்

    178 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டிக்கு எதிரான வசனங்களே இந்த வரி குறைப்புக்கு காரணம். இது நம் நாட்டுக்கு விஜய் அண்ணாவின் பரிசு.

    ஆளப்போறான் தமிழன்

    மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி வசனங்களுக்கு ஆதரவு கிளம்பியது. அதே நேரத்தில் எதிர்ப்புகளும் எழுந்தன. இப்போது ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டிருக்கிறது. இது விஜய் டயலாக்கால்தான் எனக் கூற முடியாது. ஆனால், அப்படி நினைத்துக்கொள்வதும் மகிழ்ச்சிதான்.

    English summary
    GSD related dialogues in 'Mersal' made a stir. In the meantime, the central government has reduced the GST for 178 items. Vijay fans are saying that, GST reduced due to mersal effect.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X