ஜி.எஸ்.டி வசனத்துக்கு பொங்குனீங்களே... இந்த பாட்டை என்ன பண்ணப் போறீங்க? #GSTSong

By Vignesh Selvaraj

Recommended Video

ஜி.எஸ்.டி வசனத்துக்கு பொங்குனீங்களே... இந்த பாட்டை என்ன பண்ணப் போறீங்க?- வீடியோ

சென்னை : விஜய் ஆண்டனி இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் அண்ணாதுரை. ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ள இந்தப் படத்தை ராதிகா சரத்குமார், பாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரித்துள்ளனர்.

டயானா சாம்பிகா, மகிமா, ஜுவல்மேரி என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். தில்ராஜூ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படம் நவம்பர் 30-ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ஒரு டூயட் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

எடிட்டர் விஜய் ஆண்டனி

எடிட்டர் விஜய் ஆண்டனி

இதுவரை நடிகராக, இசையமைப்பாளராக, தயாரிப்பாளராக இருந்து வந்த விஜய் ஆண்டனி, இந்தப் படத்தில் எடிட்டராகவும் மாறியிருக்கிறார். இந்தப் படத்தில் அருண்பாரதி என்பவர் பாடல் எழுதியிருக்கிறார்.

அண்ணாதுரை ஊரில்

அண்ணாதுரை ஊரில்

அண்ணாதுரையின் பெயரில் இந்த படம் உருவாகியிருப்பதால், இப்படத்திற்கான பாடல்களை அருண்பாரதி, முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை பிறந்த ஊரான காஞ்சிபுரத்திற்கே சென்று எழுதியிருக்கிறார்.

ஜி.எஸ்.டி பாடல்

இந்தப் படத்தின் ஒரு டூயட் பாடலில் ஜி.எஸ்.டி என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியிருக்கிறார். அதாவது, 'ஜி.எஸ்.டி போல என்னை நீயும் வச்சி செய்யுறே...' எனத் தொடங்குகிறது அந்தப் பாடலின் வரிகள்.

சென்சார் கட்

சென்சார் கட்

அண்ணாதுரை படம் தணிக்கை குழுவுக்குத் திரையிட்டபோது அந்த ஜி.எஸ்.டி என்கிற வார்த்தையை கத்தரிக்கச் சொல்லிவிட்டார்களாம். அதையடுத்து ஜி.எஸ்.டி என்ற வார்த்தைக்குப் பதிலாக இ.எம்.ஐ என்று மாற்றி மீண்டும் பாடலைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

பா.ஜ.க விவகாரம்

பா.ஜ.க விவகாரம்

மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி பற்றிய வசனங்கள் இடம்பெற்றதற்காக எதிர்ப்புத் தெரிவித்த பா.ஜ.க-வினர் ஜி.எஸ்.டி பாடலை மட்டும் சும்மா விடுவார்களா என்ன? யூ-ட்யூபில் ரிலீஸான பாடலுக்கு பொங்குவார்களா?

இலவச ப்ரொமோஷன்

இலவச ப்ரொமோஷன்

பா.ஜ.க-வினர் படத்தை எதிர்த்தால் நல்ல ப்ரொமோஷன் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள் திரையுலகினர். அந்த ஆசையை தமிழக பா.ஜ.க-வினர் நிறைவேற்றி படத்தை வெற்றி பெறச் செய்வார்களா இல்லை கண்டுகொள்ளாமல் விடுவார்களா என்பதுதான் தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X