Jr NTR: புலியோட பாய்ந்து வந்தாரே.. அவரோட படம் பண்ணனும்.. கொக்கிப் போட்ட பிரபல ஹாலிவுட் இயக்குநர்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கன் ஆர்ஆர்ஆர் படத்தின் நாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் படம் பண்ண வேண்டும் என்கிற தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து போட்டிப் போட்டு நடித்து உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களை தங்கள் பக்கம் கவர்ந்து இழுத்துள்ளனர்.

இதில், வேடிக்கை என்னவென்றால் அதில் பலர் ஹாலிவுட் நடிகர்களும், குறிப்பாக ஹாலிவுட் இயக்குநர்களும் தான் என்று சொல்ல வேண்டும்.

Guardians of the Galaxy Director James Gunn wish to work with RRR star Jr NTR

கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி இயக்குநர்: 2006ம் ஆண்டு ஸ்லித்தர் எனும் ஹாரர் த்ரில்லர் படத்தை இயக்கி இயக்குநராக ஆனவர் ஜேம்ஸ் கன். 2014ம் ஆண்டு மார்வெல் தயாரிப்பில் பிரம்மாண்டமாக வெளியான கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி படத்தை இயக்கிய இவர் தொடர்ந்து 2 மற்றும் 3ம் பாகத்தையும் இயக்கி அசத்தி உள்ளார்.

2021ம் ஆண்டு வெளியான சூசைட் ஸ்குவாட் படத்தையும் இயக்கியவர் ஜேம்ஸ் கன் தான். 2025ல் வெளியாக உள்ள சூபப்ர்மேன்: லெகஸி படத்தை தற்போது இயக்கி வருகிறார்.

புலியோடு பாய்ந்து வந்தாரே: இந்நிலையில், சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த இயக்குநர் ஜேம்ஸ் கன் உலகம் முழுக்க சமீபத்தில் ஆஸ்கர் மேடையில் அசத்திய அந்த ஆர்ஆர்ஆர் படம் பற்றித்தான் பேச்சு என்று கூறினார்.

Guardians of the Galaxy Director James Gunn wish to work with RRR star Jr NTR

ஆஸ்கர் மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருதினை இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் பெற்றனர். அந்த பாடலில் அப்படி ஆட்டம் போட்ட ஜூனியர் என்டிஆர் பற்றித் தான் அந்த பேட்டியில் இயக்குநர் ஜேம்ஸ் கன் மிகவும் வியந்து பேசி உள்ளார்.

புலி, சிங்கம் என காட்டு விலங்குகளுடன் அப்படி கேட்டை திறந்துக் கொண்டு பாய்ந்து வந்தாரே ஜூனியர் என்டிஆர் அவருடன் தான் ஒரு படம் பண்ண வேண்டும் என தனது ஆசையை ஹாலிவுட்டின் டாப் மோஸ்ட் இயக்குநராக வலம் வரும் ஜேம்ஸ் கன் தெரிவித்து இருப்பது இந்திய ரசிகர்களையும் குறிப்பாக ஜூனியர் என்டிஆர் ரசிகர்களையும் குஷியில் ஆழ்த்தி உள்ளது.

ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆருக்கு ஹாலிவுட்டில் ஏகப்பட்ட பேர் ரசிகர்களாகி விட்டனர். கூடிய சீக்கிரமே அந்த இருவருமே ஹாலிவுட் படங்களில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் ஜேம்ஸ் கன் மட்டும் ஜூனியர் என்டிஆரை வைத்து ஒரு படம் இயக்கி விட்டால் அவருடைய ரேஞ்சே எங்கேயோ போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Guardians of the Galaxy Director James Gunn wish to work with RRR star Jr NTR

ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் தனுஷ்: முன்னதாக அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தை இயக்கிய ரூசோ சகோதரர்கள் இயக்கத்திலேயே நடிகர் தனுஷ் தி கிரேமேன் படத்தில் நடித்திருந்தார். நடிகைகள் ஆலியா பட், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா மற்றும் சமந்தா உள்ளிட்ட பலர் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் நிலையில், மேலும், பல இந்திய நடிகர்கள் இனி ஹாலிவுட் படங்களில் சீக்கிரமே நடித்து அசத்துவார்கள்.

இயக்குநர் ஜேம்ஸ் கன்னின் பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் #JrNTR என்கிற ஹாஷ்டேக்குடன் டிரெண்டாகி வருகிறது. கொரடலா சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் NTR 30 படத்தில் ஜான்வி கபூர் உடன் இணைந்து நடித்து வரும் ஜூனியர் என்டிஆர் இயக்குநர் ஜேம்ஸ் கன்னுக்கு சீக்கிரமே கால்ஷீட் கொடுத்தால் நல்லா இருக்கும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X