சொந்த வீட்டிற்குள் நுழையவே ஷாரூக்கிற்கு தடை விதித்த பாதுகாவலர்கள்... காரணம் என்ன?

மும்பை : பிரபல நடிகர் ஷாரூக்கான் மன்னாத் பகுதியில் உள்ள தனது சொந்த வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப் படாமல் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார். ஏதோ பிரச்சினையோ என உடனே உங்கள் கற்பனைக் குதிரையை தட்டி விட்டு விடாதீர்கள். இப்படி நடந்தது ஒரு பட ஷூட்டிங்கிற்காகத் தான்.

ஹேப்பி நியூ இயர் படத்தைத் தொடர்ந்து ஃபேன் என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ஷாரூக்கான். இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் ஷாரூக். ஒருவர் நடிகர் மற்றொருவர் அவரின் தீவிர ரசிகர். மனீஷ் சர்மா என்பது ரசிகராக வரும் ஷாரூக் கதாபாத்திரத்தின் பெயர்.

பாண்ட் பாஜ் பாரத் புகழ் மனீஷ் சர்மா இயக்கும் இப்படத்தை அதித்திய சோப்ரா யாஷ் ராஜ் பிலிம் பேனரில் தயாரிக்கிறார்.

நிஜ வீட்டிற்கு முன்னதாகவே...

நிஜ வீட்டிற்கு முன்னதாகவே...

இந்த படத்தின் சில காட்சிகள் மன்னாத்தில் ஷாருகானின் நிஜ வீட்டிற்கு முன்னதாகவே எடுக்கப்பட்டது.

ஷாரூக்கானைக் காண...

ஷாரூக்கானைக் காண...

கதைப்படி தனது அபிமான நடிகர் ஷாரூக்கானைக் காண அவரது ரசிகர் மனீஷ் சர்மா, அவரது வீட்டிற்கு செல்கிறார்.

பாதுகாவலர்கள் மறுப்பு...

பாதுகாவலர்கள் மறுப்பு...

ஆனால், வீட்டிற்கு வெளியே காவல் இருக்கும் பாதுகாவலர்கள் மனீஷை உள்ளே விட மறுக்கின்றனர். அவர்களின் தடையை மீறி உள்ளே நுழைய முற்படும் ஷாரூக்கை பாதுகாவலர்கள் தள்ளி விடுகின்றனர்.

சிறப்புத் தோற்றம்...

சிறப்புத் தோற்றம்...

இந்தப்படத்தில் புதிய தோற்றத்தில் வருகிறார் ஷாரூக். இதற்காக வெளிநாட்டு சிறப்பு மேக்கப் மேன்களை கொண்டு ஷாருகானுக்கு மேக்கப் செய்யப் பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X