»   »  இந்த 'செல்ஃபி குயின்' யார் என்று கண்டுபிடிங்க பார்ப்போம்?

இந்த 'செல்ஃபி குயின்' யார் என்று கண்டுபிடிங்க பார்ப்போம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
இந்த 'செல்ஃபி குயின்' யார்?!

சென்னை: இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் வேறு யாரும் அல்ல நம்ம நடிகை குஷ்பு தான்.

வட நாட்டில் இருந்து வந்த குஷ்புவை தமிழக மக்கள் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டனர். கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு சுந்தர் சி.யை திருமணம் செய்து கொண்டு தமிழகத்து மருமகள் ஆனார்.

சினிமாவை அடுத்து அரசியலுக்கு சென்ற குஷ்பு தற்போது காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக உள்ளார்.

 ட்விட்டர்

ட்விட்டர்

குஷ்பு என்ன தான் பிசியாக இருந்தாலும் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் ரொம்பவே ஆக்டிவாக உள்ளார். நாட்டு நடப்பு பற்றி பேசுவதுடன் தனது புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

போட்டோ

போட்டோ

குஷ்பு செல்ஃபி எடுப்பதில் வல்லவர். அவரை செல்ஃபி குயின் என்று கூறும் அளவுக்கு தரமாக செல்ஃபி எடுக்கிறார். அழகாக செல்ஃபி எடுக்க தங்களுக்கும் சொல்லிக் கொடுக்குமாறு சில நடிககைள் அவரிடம் கேட்டனர்.

 31 ஆண்டுகள்

31 ஆண்டுகள்

தென்னிந்தியா பக்கம் வரும் முன்பு 31 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் குஷ்பு. பார்க்க ஒல்லியாக வித்தியாசமாக இருக்கிறார் அவர்.

 விளாசல்

விளாசல்

குஷ்பு ட்விட்டரில் பாஜகவுக்கு லெஃப்ட் அன்ட் ரைட் கொடுத்து வருகிறார். அவர் ஃபுல் ஃபார்மில் பாஜகவை விளாசுவதை பார்த்து நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.

English summary
Actress cum congress spokesperson Khushbu has posted an old picture of hers on facebook. That picture was taken 31 years before she came to South.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X