நாக சைதன்யா, சமந்தா காதல் ரகசியத்தை காட்டிக் கொடுத்தது யார் தெரியுமா?

By Siva

Recommended Video

நாக சைதன்யா, சமந்தாவின் காதல் பற்றி உண்மைகள் சொன்ன நாகர்ஜுனா- வீடியோ

ஹைதராபாத்: நாக சைதன்யா, சமந்தாவின் காதலை அவரின் வீட்டாருக்கு காட்டிக் கொடுத்தது யார் என்று நாகர்ஜுனா தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு நாக சைதன்யாவும், சமந்தாவும் சேர்ந்து நடித்துள்ள மஜிலி படம் வரும் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை கணவனும், மனைவியும் சேர்ந்து விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் அந்த பட விழாவில் நாக சைதன்யாவின் தந்தையும், நடிகருமான நாகர்ஜுனா கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது,

சமந்தா

சமந்தா

நாக சைதன்யாவும், சமந்தாவும் ஏ மாய சேசாவே படத்தில் நடித்த போதே காதலிக்கத் துவங்கிவிட்டனர். ஆனால் அவர்கள் தங்களின் காதலை குடும்பத்தாரிடம் தெரிவிக்கவில்லை. அவர்கள் என்னை நன்றாக ஏமாற்றிவிட்டனர்.

நாய்

நாய்

நாக சைதன்யா, சமந்தா இடையேயான காதலை முதலில் கண்டுபிடித்தது எங்கள் வீட்டு நாய் தான். ஒரு முறை சமந்தா எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்பொழுது எங்கள் வீட்டு நாய் அவரை நோக்கி ஓடிச் சென்று நன்றாக பழகியது. இதை பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது. நம் வீட்டு நாய்க்கு சமந்தாவை எப்படி தெரியும் என்று தோன்றியது.

நாகர்ஜுனா

நாகர்ஜுனா

எங்கள் வீட்டு நாய்தான் சைதன்யா, சமந்தாவின் காதலை கண்டுபிடித்து அனைவருக்கும் தெரிவித்தது என்றார் நாகர்ஜுனா. அதை கேட்ட சமந்தாவோ, அதற்கு என்னை நன்றாக தெரியும் மாமா என்றார். மாமனார், மருமகள் பேசியதை கேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்தார்கள்.

சூப்பர் டீலக்ஸ்

சூப்பர் டீலக்ஸ்

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. சமந்தாவின் நடிப்பை அனைவரும் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X