பொய் சொல்லாதீங்க, நான் நம்ப மாட்டேன்: இயக்குனரிடம் கதறி அழுத ஸ்ரீதேவியின் மகள்
Recommended Video

மும்பை: பொய் சொல்லாதீங்க அங்கிள் நான் நம்ப மாட்டேன் என்று ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இயக்குனர் கரண் ஜோஹாரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் நடிகை ஸ்ரீதேவி கடந்த 24ம் தேதி உயிர் இழந்தார். இதயைடுத்து மும்பை கொண்டு வரப்பட்ட அவரின் உடல் 28ம் தேதி மும்பையில் தகனம் செய்யப்பட்டது.
ஸ்ரீதேவிக்கு மகாராஷ்டிரா மாநில அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடந்தது.

மும்பை
தடக் பட வேலையில் பிசியாக இருந்ததால் ஸ்ரீதேவின் மூத்த மகள் ஜான்வி கபூர் துபாய் செல்லவில்லை. தடக் படத்தை பிரபல இயக்குனர் கரண் ஜோஹார் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

மரணம்
ஸ்ரீதேவியும், ஜான்வியும் ரொம்ப நெருக்கம் என்பது பாலிவுட்டில் அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது ஸ்ரீதேவி இறந்த செய்தியை ஜான்வியிடம் யார், எப்படி தெரிவிப்பது என்று யோசித்தார்கள்.

கரண் ஜோஹார்
கரண் ஜோஹார் ஜான்வியிடம் சென்று நைசாக பேச்சு கொடுத்து ஸ்ரீதேவி இறந்த செய்தியை தெரிவித்திருக்கிறார். எங்க அம்மா இறக்கவில்லை, சும்மா சொல்லாதீங்க என்று ஜான்வி முதலில் தெரிவித்துள்ளார்.

கதறல்
நிஜமாகவே அம்மா இறந்துட்டாங்கம்மா என்று கரண் மீண்டும் கூறியதை கேட்டு ஜான்வி கதறி அழுதுள்ளார். உடனே கரண் ஜான்வியை போனி கபூரின் தம்பி அனில் கபூரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மகிழ்ச்சி
ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பிறகு ஜான்விக்கு என்ன ஆகுமோ என்று பாலிவுட்காரர்கள் பயந்தார்கள். ஜான்வி தைரியமாக இருப்பதை பார்த்து அவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











