நேர்கொண்ட பார்வை தலைப்பை அஜித்திடம் பரிந்துரை செய்தது யார் தெரியுமோ?

By Siva

சென்னை: பிங்க் பட ரீமேக்கிற்கு தலைப்பை பரிந்துரை செய்தது யார் என்று தெரிய வந்துள்ளது.

டாப்ஸி, அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி ஹிட்டான பிங்க் படத்தை தமிழில் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் ஹெச். வினோத். பிங்க் படத்தை தான் ரீமேக் செய்ய வேண்டும் என்று அடம்பிடித்து வினோத்தை இயக்க வைத்தவர் அஜித்.

அஜித் தெரிவித்த காரணங்களால் தான் தனது மனதை மாற்றிக் கொண்டு பிங்க் படத்தை ரீமேக் செய்துள்ளார் வினோத்.

பிங்க் ரீமேக்

பிங்க் ரீமேக்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க அவரின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ளார் அஜித். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள பிங்க் படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் அதுவும் அஜித்தை அதில் நடிக்க வைக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி விரும்பினார்.

நேர்கொண்ட பார்வை

நேர்கொண்ட பார்வை

பட வேலைகளை துவங்கிய உடனேயே நேர்கொண்ட பார்வை என்று தலைப்பை அறிவித்துவிட்டார்கள். அஜித் சிவா இயக்கத்தில் நடித்தபோது படத்தின் தலைப்பை கேட்டு ரசிகர்கள் கெஞ்சிக் கதறியது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் இந்த படத்திற்கு துவக்கத்திலேயே தலைப்பை அறிவித்தது ஆச்சரியமாக இருந்தது.

சிவா

சிவா

வினோத்-அஜித் கூட்டணி படத்திற்கான தலைப்பை பரிந்துரை செய்ததே இயக்குநர் சிவா என்று தெரிவித்துள்ளார் வினோத். விஸ்வாசம் படத்தில் நடித்தபோதே அஜித் பிங்க் பட ரீமேக் பற்றி சிவாவிடம் கூறியுள்ளார். அதை கேட்ட சிவா, சார் நாம் மட்டும் அடுத்தடுத்து படங்கள் பண்ணாமல் இருந்திருந்தால் நானே இந்த ரீமேக்கையும் செய்திருப்பேன் என்று அஜித்திடம் தெரிவித்துள்ளார்.

அஜித்

அஜித்

பிங்க் ரீமேக்கிற்கு நேர்கொண்ட பார்வை என்று தலைப்பு வைக்கலாம் சார் என்று அஜித்திடம் கூறியிருக்கிறார் சிவா. பிங்க் பட ரீமேக் வேலைகள் துவங்கிய போது என்ன தலைப்பு வைக்கலாம் என்று வினோத் யோசித்திருக்கிறார். அப்பொழுது சிவா தன்னிடம் சொன்ன தலைப்பை தெரிவித்துள்ளார் அஜித். அஜித் தெரிவித்த தலைப்பை கேட்ட வினோத், சூப்பர் சார் அந்த தலைப்பையே வைத்துவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X