twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா பாதிப்புக்குப் பிரபல நடிகர் பலி.. அண்ணன் உயிரிழந்த 2 நாளில் பரிதாபம்.. திரையுலகினர் சோகம்!

    By
    |

    மும்பை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் உயிரிழந்தார். அண்ணன் உயிரிழந்த இரண்டே நாளில் இவரும் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    இருந்தும் இந்த வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. அது தினமும் பலரை பலிவாங்கி வருகிறது.

    கொரோனா பார்த்த வேலை.. ரசிகர்களுக்கு இந்த வருடம் டிஜிட்டல் தீபாவளிதானா? எந்தெந்த படங்கள் ரிலீஸ்?கொரோனா பார்த்த வேலை.. ரசிகர்களுக்கு இந்த வருடம் டிஜிட்டல் தீபாவளிதானா? எந்தெந்த படங்கள் ரிலீஸ்?

    சமீப காலமாக

    சமீப காலமாக

    இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாள் தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைய தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. புதிதாக இந்தத் தொற்றுக்கு ஆளாகிறாவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

    பரிசோதனை

    பரிசோதனை

    கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 1,19,502 ஆக உயர்ந்துள்ளது. 6,25,857 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 10 கோடியே 44 லட்சத்து 20 ஆயிரத்து 894 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

    எஸ்.பி.பாலசுப்ரமணியம்

    எஸ்.பி.பாலசுப்ரமணியம்

    இதற்கிடையே, இந்த தொற்றுக்கு சினிமா, அரசியல் பிரபலங்களும் உயிரிழந்து வருகின்றனர். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பாடகர் ஏ.எல்.ராகவன், நடிகர் புளோரன்ட் பெரேரா உள்பட பலர் உயிரிழந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட சினிமாவிலும் பலர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

    நரேஷ் கனோடியா

    நரேஷ் கனோடியா

    இந்நிலையில் பிரபல குஜராத்தி நடிகர் நரேஷ் கனோடியா, கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். அவருக்கு வயது 77. குஜரத்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.

    சிகிச்சை பலனின்றி

    சிகிச்சை பலனின்றி

    அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை நடந்தது. சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவர், பாஜக முன்னாள் எம்.எல்.ஏவும் கூட. இவர் சகோதரர் மகேஷ் கனோடியா, கடந்த 25 ஆம் தேதிதான், உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

    இரண்டே நாளில்

    இரண்டே நாளில்

    இவர் முன்னாள் எம்.பியாக இருந்தவர். பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அண்ணன் மறைந்த இரண்டே நாளில் தம்பியும் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து திரையுலகினர், அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மகேஷ் கனோடியா மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    English summary
    Gujarati film actor Naresh Kanodia Passed Away Of Coronavirus
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X