ப்பா.. காவாலா பாட்டுக்கு குலுக்கல் குத்தாட்டம் போட்ட குஜராத்தி நடிகை.. தமன்னாவை விட தாறுமாறு!

குஜராத்: ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான காவாலா பாடல் வெளியானதில் இருந்தே டிரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமா நடிகைகள், சின்னத்திரை பிரபலங்கள் எல்லாம் அந்த பாட்டுக்கு ஆட்டம் போட்டது எல்லாம் பழைய கதை.

தற்போது தமன்னாவை விட பயங்கர கவர்ச்சியாக குஜராத்தி நடிகை சோபியா அன்சாரி 'காவாலா' பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார்.

Gujarati hot actress Sofia Ansari grooves for Jailer Kaavaala song

நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியான இந்த பாடல் இந்தியா முழுவதும் டிரெண்டாக முக்கிய காரணமே சமீபத்தில் தமன்னா நடித்த சில செக்ஸியான வெப்சீரிஸ் தான் என்கின்றனர்.

44 மில்லியன் வியூஸ்: தனது பாடல்களை மில்லியன் கணக்கில் வியூஸ் எடுக்கும் மந்திரத்தை இசையமைப்பாளர் அனிருத் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார். லியோவின் "நா ரெடி" பாடல் வெளியாகி 3 வாரங்களில் 65 மில்லியன் வியூஸை அள்ளி உள்ளது. இந்நிலையில், காவாலா பாடல் வெளியாகி 10 நாட்களிலேயே 44 மில்லியன் வியூஸை கடந்துள்ளது.

Gujarati hot actress Sofia Ansari grooves for Jailer Kaavaala song

லியோ படத்தில் விஜய் பாடிய பாடலை இன்ஸ்டாகிராமில் முறியடித்த தமன்னா நடனமாடிய காவாலா பாடல் வெகு விரைவாக யூடியூபிலும் அதிக வியூஸ்களை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளாமர் குயினான தமன்னா: நடிகை தமன்னா பெட்ரமாக்ஸ் லைட், நவம்பர் ஸ்டோரி உள்ளிட்டவற்றில் நடிக்கும் போது ரொம்பவே ஹோம்லியாக சுடிதார் மட்டுமே அணிந்து நடித்து வந்த நிலையில், திடீரென பாலிவுட்டுக்கு சென்ற அவர், ஜீ கர்தா வெப்சீரிஸில் படு ஆபாசமாக நடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

அதன் பின்னர் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆந்தாலஜியிலும் படுக்கையறை காட்சிகளில் நடித்த தமன்னா கிளாமர் குயினாகவே மாறி உள்ளார். தமன்னாவின் அந்த கவர்ச்சி வளர்ச்சியை கச்சிதமாக இயக்குநர் நெல்சன் ஜெயிலர் படத்தின் காவாலா பாட்டில் பயன்படுத்திக் கொண்டார்.

குஜராத் நடிகை குத்தாட்டம்: காவாலா பாட்டுக்கு பிக் பாஸ் தனலட்சுமி, சம்யுக்தா, அமலா ஷாஜி, இரவின் நிழல் சாய் பிரியங்கா ரூத் உள்ளிட்ட பலர் இதுவரை ரீல்ஸ் போட்டுள்ள நிலையில், தற்போது குஜராத் வரை இந்த பாடல் டிரெண்டாகி வருகிறது.

பிரபல குஜராத் நடிகையான ஹாட் குயின் சோபியா அன்சாரி படுமோசமான கிளாமர் உடையில் தற்போது ஜெயிலர் படத்தின் காவாலா பாட்டுக்கு அப்படியொரு குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்டுள்ள ஹாட் வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் தீயாக டிரெண்டாகி வருகிறது. இன்னும் யாரெல்லாம் எப்படி எப்படி டான்ஸ் போட போறாங்களோ தெரியல!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X