twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வரலாறு முக்கியம் பிரதமரே: மோடியின் தவறை சுட்டிக் காட்டிய நடிகை

    By Siva
    |

    மும்பை: பிரதமர் மோடி தெரிவித்த ஒரு தகவல் தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளார் பாலிவுட் நடிகை குல் பனாக்.

    பிரதமர் நரேந்திர மோடி நேற்று கன்னியாகுமரிக்கு சென்றிருந்தார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமை அடைகிறேன் என்றார்.

    இதையடுத்து மோடி கூறியது தவறு என்று நடிகையும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவருமான குல் பனாக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட ஓவியா சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட ஓவியா

    குல் பனாக்

    இந்திரா காந்தி(பிரதமராக இருந்தபோது)தானே இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சர் சார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் குல் பனாக்.

    நிர்மலா சீதாராமன்

    இந்திரா காந்தி பகுதி நேர பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார் என்று ஒருவர் குல் பனாகிடம் தெரிவித்துள்ளார்.

    பட்டம்

    நரேந்திர மோடி வரலாறு அல்ல அரசியல் அறிவியலை மட்டுமே படித்துள்ளார் போன்று...அவரின் பட்டம் எங்கேயோ தொலைந்துவிட்டது என்று ஒருவர் கலாய்த்துள்ளார்.

    பிரதமர்

    பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியபோது நடந்த கூட்டங்களில் பாதுகாப்புத் துறை அமைச்சரை சேர்த்துக் கொள்ளவில்லை என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Bollywood actress Gul Panad tweeted a question to PM Modi saying that, 'With all due respect Sir, wasn't Indira Gandhi the first woman Defence Minister (when as PM she also held that portfolio ) ? Unless ANI misheard of course ..'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X