ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்!
மும்பை: இந்தி படமான கல்லி பாய் இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தியில் நடிகர் ரன்வீர் சிங், நடிகை ஆலியா பட் ஆகியோர் நடிப்பில் உருவான படம் கல்லி பாய். இந்தப் படத்தை ஸோயா அக்தர் இயக்கியிருந்தார்.
இந்த படம் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் ரிலீஸானது. மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் 230 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை குவித்தது.

சர்வதேச படத்தின் கீழ்
இந்தியாவில் மட்டும் கல்லி பாய் படம் 165 கோடி ரூபாயை வசூலித்தது. இந்நிலையில் இந்தப் படம் இந்தியாவின் சார்பில் சிறந்த சர்வேதச படத்தின் கீழ் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமர்சனம்
மும்பை நகரில் வசிக்கும் ஏழை இளைஞனின் இசைக் கனவு பற்றிய கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது கல்லி பாய் படம். இப்படத்திற்கு நல்ல விமர்சனமும் கிடைத்தது.

28 படங்கள் பரிசீலனை
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் படங்களின் தேர்வுக்குழு தலைவராக 9 தேசிய விருதுகள் பெற்ற வங்காள இயக்குநர் அபர்ணா சென் செயல்பட்டார். இந்த தேர்வுக்குழு மொத்தம் 28 படங்களை பரிசீலித்தது.

கல்லி பாய் தேர்வு
அதில் கல்லி பாய் படம் மட்டும் 92வது ஆஸ்கர் விருதுக்கான படமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆஸ்கர் தேர்வுக்காக தமிழிலிருந்து வட சென்னை, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்கள் அனுப்பப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











