தட்டிதூக்கிய சந்தானம்..“குலு குலு“ இரண்டாம் நாள் வசூல் இத்தனை கோடியா?

சென்னை : நடிகர் சந்தானம் நடித்துள்ள குலு குலு படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

GuluGulu Movie Review | Yessa ? Bussa ?| GuluGulu | Santhanam |*Review

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் சந்தானம். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து காமெடியனாக நடித்துள்ளார்.

பின்னர், ஹீரோ அவதாரம் எடுத்த சந்தானம் தொடர்ந்து பலப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

குலுகுலு

குலுகுலு

மேயாதமான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் குலு குலு. இந்தப் படத்தில் சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, லொள்ளு சபா மாறன், டி எஸ் ஆர், பிபின், கவி, ஹரிஷ், யுவராஜ், மாரிதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் கதை

படத்தின் கதை

வெளிநாட்டை பூர்வீகமாக கொண்ட பழங்குடியினத்தை சேர்ந்தவர் சந்தானம். யார் என்ன உதவி கேட்டாலும் தயங்காமல் உடனே உதவி செய்யும் குணம் கொண்டவர் சந்தானம். இதனால், அவர், பல சிக்கல்களில் சிக்கிக் கொள்கிறார். அப்படி ஒரு இளைஞர்களுக்கு அவர் உதவி செய்ய பெரிய ஆபத்து ஒன்றில் சிக்கிக்கொள்கிறார் சந்தானம். அந்த ஆபத்திலிருந்து அவர் எப்படி தப்பித்தார் என்பது தான் படத்தின் கதை.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

வழக்கமாக வார்த்தைக்கு வார்த்தை கலாய்க்கிறேன் என்ற பெயரில் ரசிகர்களை கொடுமைப்படுத்தும் சந்தானம் இந்த படத்தில் அமைதியாக, இயல்பாக நடித்துள்ளார். வெள்ளிக்கிழமை வெளியான இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தை பார்த்தவர்கள் சந்தானத்தின் நடிப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர். சந்தோஷ் நாராயணனின் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ராஜ் நாராயணன் தயாரித்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

குலுகுலு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்

குலுகுலு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்

குலு குலு திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களாகி உள்ள நிலையில், இத்திரைப்படம் இந்திய அளவில் ரூ 3 கோடிக்கு மேல் வசூலாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படம் வெளியான முதல் நாளில், 1.60 கோடியை வசூலித்துள்ளது. இரண்டாம் நாள் வசூல் 2 கோடியாகவும் மொத்த வசூல், 3.60 கோடியாக உள்ளது. வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தானம் இறுதியாக சபாபதி படத்தில் நடித்து இருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சபாபதி திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X