ஏமாத்திட்டீங்களே, இதெல்லாம் நியாயமே இல்லை அனிருத் #GumOnGroove
சென்னை: புத்தாண்டுக்கு சர்பிரைஸ் கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு இப்படி செய்துவிட்டீர்களே அனுருத்.
புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளது. இந்நிலையில் புத்தாண்டையொட்டி உங்களுக்கு எல்லாம் ஒரு சர்பிரைஸாக க்ரூவி பாடலை அளிக்கிறோம். நாளை மாலை வெளியிடப்படும் என்று இசையமைப்பாளர் அனிருத் நேற்று ட்வீட் செய்தார்.

அறிவித்தபடி இன்று மாலை 5 மணிக்கு பாடலை அல்ல மாறாக டீஸரை வெளியிட்டுள்ளார்கள். பாடலை நாளைக்கு வெளியிடுவார்களாம். டீஸர் நன்றாகத் தான் உள்ளது. ஆனால் பாடலை எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு டீஸரை பார்த்ததும் லைட்டா அதிருப்தியாகிவிட்டது.
பரவாயில்லை, நாளை பாடலை கேட்டுக் கொள்வோம். ரஜினியின் பேட்ட படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தலைவர் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்ற அனிருத்தின் கனவு நிறைவேறியுள்ளது.
அடுத்த ஆண்டு தனுஷ் படத்திற்கு இசையமைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைப்பார் என்று நம்புவோம்.


Click it and Unblock the Notifications











