ஆடியோ வெளியீட்டு விழாவில் பஞ்சரான பயில்வான் ரங்கநாதன்.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: நடிகராகவும், பத்திரிகையாளராகவும் விளங்குபவர் பயில்வான் ரங்கநாதன். நடிகர்கள், நடிகைகள் குறித்து அந்தரங்கமான விஷயங்களை பேசி; அதனால் சர்ச்சைகளை உருவாக்கி அதனை வைத்து யூட்யூபில் பிரபலமாக இருப்பவர் அவர். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. சூழல் இப்படி இருக்க அறம் செய் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பயில்வான் ரங்கநாதனை குணா என்பவர் வைத்து செய்திருக்கிறார்.

பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்திவருபவர். சினிமாவில் நடித்து, பத்திரிகையாளராக இருந்துவருபவர் இப்போது யூட்யூப் தளத்தில் இயங்கிவருகிறார். தான் பேசும் சேனல்கள் அதிக வியூஸ்களை சந்திக்க வேண்டும் என்பதற்காக நடிகர்கள், நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயங்களை தொட்ர்ந்து பேசிவருகிறார். அவர் பேசுவது எல்லாம் பச்சை பொய் என்று ஒருதரப்பினர் கூறினாலும்; கடந்த பல வருடங்களாகவே சினிமாவுடன் தொடர்பில் இருப்பதால் தான் பேசுவது உண்மை என்று பயில்வான் சொல்வது வழக்கம்.

Bayilvan Ranganathan Aram Sei

பதிலடி: ஆரம்பத்தில் அவரது பேச்சு செலிபிரிட்டிகளால் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல அவரது பேச்சில் அநாகரீகம் ஒட்டிக்கொள்ள ஆரம்பித்தது. நிலைமை இப்படி இருக்க நடிகை ரேகா நாயர் இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்ததை வைத்து பயில்வான் தாறுமாறாக பேச; ரேகாவோ நேரடியாக பயில்வானிடம் மல்லுக்கு போய்விட்டார். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி; ரேகா நாயருக்கு பலரும் தங்களது பாராட்டை கொடுத்தனர். அதேபோல் ராஜன், விஷால், பாலா உள்ளிட்டோரும் தங்களது தரமான பதிலடியை கொடுத்திருக்கின்றனர்.

வழக்கு போடுங்கள்: தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரம், நடிகை அஞ்சலி தொடர்பான விவகாரம், இயக்குநர் பாலாவுக்கும் அவரது மனைவிக்கும் நடந்த விவாகரத்து என பயில்வான் ரங்கநாதன் பேசாத விஷயங்களே இல்லை. ஆனால் அத்தனையையும் இவர் அருகில் இருந்து பார்த்த மாதிரியே பேசுவார். இதனால் பல பத்திரிகையாளர் சந்திப்புகளில் சலசலப்பும் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வைத்து செய்த ஷகீலா:சமீபத்தில்கூட ஒரு சேனலில் நிகழ்ச்சி ஒன்றை குயிலி தொகுத்து வழங்க; ஷகீலாவும் கலந்துகொண்டார். அப்போது பயில்வான் ரங்கநாதனிடம் ஷகீலா, “இவ்வளவு பேசுறீங்களே உங்களது மகள் யாரை காதலிக்கிறார். அவள் காதலிப்பது ஒரு பெண்ணை” என்று கூறினார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ரங்கநாதன், 'நாக்கு அழுகிடும்’ என்று சொன்னார். அதற்கு ஷகீலா, உங்களது மகளை பற்றி சொன்னால் வலிக்கிறது அல்லவா அதுபோல்தான் நடிகைகளின் அம்மாக்களுக்கும் இருக்கும் என்று தரமான பதிலடி கொடுத்தார்.

அறம் செய்: இந்நிலையில் அறம் செய் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய குணா என்பவர், “பயில்வான் ரஙக்நாதனுக்கு ஒரு வேண்டுகோள். சினிமாவில் சில விஷயங்கள் மாற வேண்டும்.. நான் பார்த்ததில்லை. ஆனால் கேள்விப்பட்ட விஷயங்களை சொல்கிறேன் என்று பயில்வான் சொல்கிறார். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் தொடர்பாக பேசி வீடியோ ஒன்றை அப்லோட் செய்யலாம். அதுதொடர்பான விழிப்புணர்வை செய்யலாம்.

குரல் கொடுக்கலாமே: சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுக்கலாமே. அறம் என படத்தின் தலைப்பு இருப்பதால்தான் இதை இங்கு நான் பேசுகிறேன். மற்றவர்கள் போல் வந்துவிட்டு படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு போக முடியாது. சமூகத்துக்கு ஏதேனும் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார். குணாவின் இந்தப் பேச்சை கேட்ட பயில்வான் ரங்கநாதன், மேடையில் அமர்ந்து தனது காதை பொத்திக்கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X