கமல் மூளையே மூளை.. குணா பட டைட்டிலில் வந்த சூலம்.. இதுக்குப் பின்னாடி இவ்ளோ பெரிய கதை இருக்கா?

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் தனது படங்களை எந்த அளவுக்கு நேசித்து, யோசித்து செய்கிறார் என்பதற்கும் அவரது உழைப்பு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வீண் போகாது என்பதற்கு சாட்சியாக ரிலீஸ் சமயத்தில் ஓடாத படங்கள் கூட பின்னாளில் ரசிகர்களால் போற்றிப் பாடக்கூடிய படங்களாக மாறி வருவதை கண்முன்னே கண்டு வருகிறோம்.

இந்திய சினிமாவிலேயே கமல்ஹாசன் போல ஒருவர் இல்லை என்பதை அனைத்து பிரபலங்களும் ஏற்றுக் கொள்வார்கள். அவர் செய்த அளவுக்கு பரிசோதனை முயற்சிகளை சினிமாவில் யாரும் மேற்கொள்ளவில்லை.

Gunaa title designer reveals how Kamal Haasan brain works to place Trisul in Gunaa movie poster

33 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் எடுத்த குணா திரைப்படம் மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த மஞ்சுமெல் பாய்ஸ் படம் உருவாக காரணமாக அமைந்தது எல்லாம் கமல்ஹாசனின் செயல்தான் எனக் கூறுகின்றனர். குணா படம் தற்போது விரிவாக அலசப்பட்டு வரும் நிலையில், அந்த படத்தின் டைட்டிலில் உள்ள சூலம் கூட ஒரு கதை சொல்வது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கமல்ஹாசனின் குணா: சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்தின் தளபதி படத்துக்கு போட்டியாக வெளியானது. கமல்ஹாசன், ரோஷினி, ரேகா மற்றும் ஜனகராஜ் உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடித்திருந்தனர். ஒரு பணக்கார வீட்டு பெண்ணை தனது அபிராமி ஆக நினைக்கும் குணா அந்தப் பெண்ணை கடத்திச் சென்று காதலிப்பதும், கொடைக்கானலில் ஒரு குகையில் ஹீரோயின் மீது அன்பு செலுத்த, அந்தப் பெண்ணுக்கு அவர் மீது எப்படி காதல் உண்டாகிறது. கடைசியில் என்ன ஆகிறது என்பது தான் குணா படத்தின் கதை. குணா படம் வெளியான பின்னர், அந்த குகையே குணா குகையாக டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாறியது.

மஞ்சுமெல் பாய்ஸ்: இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் 21 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 230 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸில் வசூல் ஈட்டியுள்ளது. அதற்கு முழு காரணமும் கமல் இயக்கிய குணா படம் தான் என அந்த படத்தின் இயக்குநர் சிதம்பரமே கூறியிருப்பது கமல் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. குணா படம் வரும்போது அதைக் கொண்டாட தவறி விட்டோமே என நினைத்து தற்போது அந்த படம் குறித்து ஏகப்பட்ட விவாதங்களையும் ஆராய்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.

குணா டைட்டில் சூலம்: குணா படத்தை சந்தானபாரதி இயக்கினாலும் அந்த படத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்டது கமல்ஹாசன் தான். குணா படத்தின் போஸ்டரில் டைட்டிலுக்கு கீழ் இடம்பெற்றுள்ள சூலத்திற்கும் ஒரு கதை இருக்கிறது என அந்த படத்தின் டைட்டில் போஸ்டரை டிசைன் செய்தவர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

அபிராமியை குறிக்கிறது: குணா என்பது சிவனின் ஒரு பெயர் அந்த போஸ்டரில் சிவபெருமான் உள்ளார். ஆனால், சக்தியான அபிராமி இல்லை என நினைத்த கமல்ஹாசன் டிசைனர் குணா டைட்டிலுக்கு கீழே போட்ட கோட்டை சூலம் ஆக மாற்ற சொல்லி இருக்கிறார். சூலம் கீழே வருவது போல டிசைன் செய்து அவர் கொடுிக்க, சூலம் எப்போதும் மேல்நோக்கி தான் இருக்க வேண்டும் என மீண்டும் டிசைனை மாற்ற சொல்லி கடைசியாக மேல்நோக்கி சூலம் இருப்பது போன்ற டிசைனை கமல்ஹாசன் ஓகே செய்திருக்கிறார். வெறும் கைதட்டல், காசுக்காக படம் எடுக்கிறவர் இல்லை கமல்ஹாசன் என கடைசியாக அந்த டிசைனர் சொல்லும் வார்த்தைகள் புல்லரிக்க செய்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X