திரைத் துளி
பார்வை ஒன்று பத்தாது என்று மீண்டும் பார்த்துக் கொள்ளப் போகிறார்கள் குணாலும், மோனலும் (திரையில்தானுங்கோவ்).
படத்தின் பெயர் "பேசாத கண்ணும் பேசுமே". இங்கேயும் கண் பார்வையா? (விட மாட்டீங்களேப்பா இந்த சென்டிமென்டை).
வித்தியாசமான கதையுடன் கூடிய இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினும் இருக்கிறார்.
படத்தை இயக்கப் போவதும் அதே டைரக்டர் முரளி கிருஷ்ணாதான். பரணிதான் இந்தப் படத்திற்கும்இசையமைக்கிறார். பா.விஜய், கபிலன் ஆகியோர் பாடல்களை எழுதிகிறார்கள்.
படத்தை தயாரிக்கப் போவது யார் தெரியுமா? ஆர்.சந்திரசேகர். இருக்கட்டுமே என்கிறீர்களா? கொஞ்சம் இருங்கசார். இந்த ஆர்.சந்திரசேகர் வேறு யாருமல்ல, உங்கள் ஆர்.பார்த்திபனின் சொந்த உடன்பிறப்புதான்.
அண்ணனை வைத்து அபிமன்யூ படத்தைத் தயாரித்த அவர் இப்போது இரண்டாவது படத்தை தயாரிக்கிறார். பிரபுநடித்த "ஆயிரம் பொய் சொல்லி" படத்திற்கும் இவர்தான் கதை எழுதியுள்ளார்.


Click it and Unblock the Notifications











