twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மறுத்தார் பூஜா ஹெக்டே.. புராண கதையில் அனுஷ்கா? 'சகுந்தலை'யின் காதலை இயக்கும் பிரபல இயக்குனர்!

    By
    |

    சென்னை: மகாபாரத கதாபாத்திரமான சகுந்தலையின் காதல் கதையை பிரபல இயக்குனர் படமாக இயக்க இருக்கிறார்.

    அனுஷ்கா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம், ருத்ரமாதேவி. இந்தப் படத்தை இயக்கியவர் குணசேகர்.

    இந்தப் படத்தில் ராணா, அல்லு அர்ஜுன் உள்பட பலர் நடித்திருந்தனர். தமிழிலும் இந்தப் படம் வெளியானது.

    இயக்குனர் குணசேகர்

    இயக்குனர் குணசேகர்

    இதற்கு முன் மகேஷ்பாபு, பூமிகா நடித்த ஒக்கடு, மகேஷ்பாபு, த்ரிஷா நடித்த சைனிகுடு, அல்லு அர்ஜுன், ஆர்யா நடித்த வருடு உள்பட பல படங்களை இயக்கி இருக்கிறார், குணசேகர். இவர் இயக்கிய ஒக்கடுதான் தமிழில் விஜய், த்ரிஷா நடிப்பில் கில்லி என ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது.

    வாய்ப்பில்லை

    வாய்ப்பில்லை

    இப்போது குணசேகர், ஹிரன்யா கஷ்யபா என்ற படத்தை இயக்க இருந்தார். இதில் ராணா ஹீரோவாக நடிப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் டிராப் ஆனதாக கூறப்பட்டது. ஆனால், அதை ராணா மறுத்திருந்தார். இந்நிலையில், இப்போது இந்த படம் தொடங்க வாய்ப்பில்லை என்று தெரிவித்து இருந்தார் குணசேகர்.

    புராண காதல் கதை

    புராண காதல் கதை

    இதற்கிடையே இவர் அடுத்தப் பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் சகுந்தலம் என்ற புராண காதல் கதையை இயக்க இருக்கிறார். மகாபாரதத்தின் ஒரு கதாபாத்திரமான சகுந்தலையின் கதைதான் இது. விசுவாமித்திர முனிவருக்கும் மேனகைக்கும் பிறந்தவள் சகுந்தலை.

    காந்தர்வ மணம்

    காந்தர்வ மணம்

    இவர், மன்னர் துஷ்யந்தனை காதலிக்கிறார். பின்னர் காந்தர்வ மணம் புரிந்துகொள்கிறார். ஒரு கட்டத்தில் அவரைப் பிரிகிறார் துஷ்யந்தன். முனிவர் சாபத்தால், கணவர் துஷ்யந்தன் அவரை மறக்கும் நிலை ஏற்படுகிறது. அவர் மகன்தான் பரதன். பல்வேறு துன்பங்களை கடந்து சகுந்தலை கணவருடன் எப்படி இணைகிறார்.

    நோ சொன்ன பூஜா

    நோ சொன்ன பூஜா

    இந்த புராணக் கதையை மையமாக வைத்துதான் இந்த படம் உருவாகிறது. இதில் சகுந்தலையாக நடிக்க, நடிகை பூஜா ஹெக்டேவிடம் இயக்குனர் குணசேகர் பேசியதாகவும், ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க விருப்பமில்லை என்று அவர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாயின. இதை தயாரிப்பாளர் நீலிமா குணா மறுத்திருந்தார்.

    மணி சர்மா இசை

    மணி சர்மா இசை

    இதனால் அனுஷ்கா அல்லது பாலிவுட் ஹீரோயின் ஒருவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை குணா டீம் ஒர்க்ஸ் என்ற நிறுவனம் சார்பில் நீலிமா குணா தயாரிக்கிறார். மணி சர்மா இசை அமைக்கிறார். பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்பட பல மொழிகளில் உருவாக இருக்கிறது.

    எம்.எஸ்.சுப்புலட்சுமி

    எம்.எஸ்.சுப்புலட்சுமி

    ஏற்கனவே சகுந்தலையின் காதலை மையமாக வைத்து சில புராண படங்கள் வெளியாகி உள்ளன. மறைந்த கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி நடிப்பில் 1940 ஆம் ஆண்டு சகுந்தலை படம் வெளியாகி உள்ளது. இதே கதை மலையாளத்தில் 1965 ஆம் ஆண்டு படமாகியுள்ளது.

    English summary
    Will Anushka shetty play shakuntalai in Gunasekhar film?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X