என்னா அடி அடிக்கிறாங்க கர்நாடக போலீஸ்.. தாங்க முடியலைங்க.. குண்டு கல்யாணம் கதறிக் கதறி அழுகை!
சென்னை: பெங்களூர் போயிருந்தேங்க.. அங்கே அதிமுகவினரை கர்நாடக போலீஸ்காரங்க என்னா அடி அடிக்கிறாங்க.. எங்களால தாங்க முடியலைங்க என்று கதறியும், குமுறியும் அழுதபடி கூறினார் நடிகர் குண்டு கல்யாணம்
சென்னையில் இன்று நடந்த திரையுலகினரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முதல் ஆளாக வந்தவர்களில் குண்டு கல்யாணமும் ஒருவர். இவர் அதிமுக மேடைப் பேச்சாளராக நீண்ட காலமாக பேசி வருபவரும் கூட.
குண்டு கல்யாணம் செய்தியாளரிடம் பேசினார். அழுதபடி, குமுறியபடி பேச ஆரம்பித்த அவர் பேச்சின்போது படு ஆவேசமாக முடித்தார். குண்டு கல்யாணத்தின் குமுறலிலிருந்து.....

பெங்களூர் போயிருந்தேங்க
நான் பெங்களூர் போயிருந்தேங்க. அங்கே அம்மாவைப் பார்க்க வரும் தொண்டர்களை கர்நாடக போலீஸார் அடிக்கின்றனர்.

என்னா அடிங்கிறீங்க...!
என்னா அடி அடிக்கிறாங்க கர்நாடக போலீஸ். தாங்க முடியலைங்க...( குமுறிக் குமுறி அழுகிறார்).

நவராத்திரி சமயத்தில் போயா...!
(இப்போது கோபாவேசத்திற்கு குரல் மாறுகிறது..) நவராத்திரி சமயத்தில் எங்களது அம்மாவை எதிரிகள் சிறையில் அடைத்துள்ளனர்.

குளோஸ் பண்ணுவாங்க எங்க அம்மா
எப்படி அந்த சக்தி அத்தனை பேரையும் குளோஸ் செய்தாளோ, அதேபோல எங்களது அம்மா, மகிஷாஷுரமர்த்தினி அவதாரம் எடுத்து அத்தனை பேரையும் குளோஸ் செய்து மீண்டும் முதல்வராக வருவார்.

அம்மாதான்.. அம்மாதான்...!
(இப்போது மேலும் கோபமான குரலுக்கு மாறுகிறார் குண்டு...) எப்போதும் எங்கள் அம்மாதான் முதல்வர்.. அம்மாதான் முதல்வர் என்றுமே.. என்று கத்தியபடி பேச்சை முடித்தார் குண்டு கல்யாணம்.


Click it and Unblock the Notifications











