அயலான், கேப்டன் மில்லர் 2ம் கிடையாது.. ரியல் பொங்கல் வின்னர் யாரு தெரியுமா?.. டாப் 6 லிஸ்ட் இதோ!
சென்னை: தமிழ்நாட்டில் இந்த பொங்கலுக்கு கேப்டன் மில்லர் வசூலில் வெற்றி பெற்றாரா? அயலான் வெற்றி பெற்றதா என ரசிகர்கள் சண்டை போட்டுக் கொண்டு இருக்கும் நிலையில், தம்பி அங்க என்னப்பா சத்தம் என குண்டூரில் இருந்து ஒரு குரல் எழுந்து நிற்கிறது. பொங்கல் மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு மொத்தம் 6 படங்கள் நேற்று வெளியாகின. இதில், 5 படங்களின் வசூலை மொத்தமாக கூட்டினால் கூட அந்த ஒரு படத்துக்கு இணையாகாது என்பது தான் ஹைலைட்.
ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாதது ரசிகர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இந்த பெரிய பொங்கல் விடுமுறைக்கு பெரிய பாதிப்பாகவே மாறியிருக்கிறது. இந்த பொங்கலுக்கு வெளியான 6 படங்களின் வசூல் குறித்தும் அதில், பொங்கல் வின்னர் யார் என்பது குறித்தும் இங்கே பார்த்து விடலாம் வாங்க..

6வது இடத்தில் மிஷன் பார்ட் 1: ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த ஜனவரி 12ம் தேதி வெளியான மிஷன் பார்ட் 1 திரைப்படம் முதல் நாளில் அதிக பட்சமாக 2 கோடி முதல் 3 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அருண் விஜய் ஆக்ஷனில் தெறிக்கவிட்டுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

5வது இடத்தில் மெரி கிறிஸ்துமஸ்: ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிப்பில் நேற்று வெளியான மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் ஒட்டுமொத்தமாகவே 3 முதல் 5 கோடி ரூபாய் தான் வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியிலும் இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

4வது இடத்தில் அயலான்: பொங்கலை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஏலியன் படம் அந்த ஜானருக்காகவே மிகப்பெரிய அளவில் பிசினஸ் செய்திருக்க வேண்டும். ஆனால், ஒட்டுமொத்தமாகவே அந்த படம் 10 கோடி ரூபாய் வரை தான் முதல் நாளில் வசூல் ஈட்டியிருக்கிறது. பொங்கல் விடுமுறை முழுவதும் ஓடினால் படத்தின் பட்ஜெட் தொகையை தாண்டி லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3வது இடத்தில் ஹனுமான்: தேஜா சஜ்ஜா, வரலக்ஷ்மி சரத்குமார், வினய், அம்ரிதா அய்யர் நடிப்பில் கடவுள் அனுமான் மற்றும் சூப்பர் ஹீரோ கான்செப்ட்டை வைத்து உருவாகி உள்ள ஹனுமான் படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளில் ஹனுமான் படம் 10 முதல் 12 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

2வது இடத்தில் கேப்டன் மில்லர்: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவ ராஜ்குமார் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் முதல் நாளில் 17 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டி 2வது இடத்தை பிடித்துள்ளது. பிரியங்கா மோகன், அதிதி பாலன், நிவேதா சதீஷ் என அதிகமாக நடிகைகளுக்கு முக்கியத்துவமும் இந்த படத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

முதலிடத்தில் மகேஷ் பாபு படம்: இந்த பொங்கலுக்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபு நடித்து வெளியான குண்டூர் காரம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும், பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் உலகளவில் 82 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு விஜய்யின் லியோ திரைப்படம் முதல் நாளில் 140 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டியது. பிரபாஸின் சலார் படம் 176 கோடி வசூல் ஈட்டிய நிலையில், மகேஷ் பாபு படம் அதை விட பாதி தான் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பொங்கல் விடுமுறையை பயன்படுத்தி முதல் வாரத்திலேயே 300 முதல் 400 கோடி வசூலை இந்த படம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications











