Guntur Kaaram Box Office: அயலான், கேப்டன் மில்லரை பந்தாடிய குண்டூர் காரம்... முதல் நாள் கலெக்‌ஷன்

சென்னை: கோலிவுட்டில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் பொங்கலுக்கு வெளியாகின. அதேபோல் தெலுங்கில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம், ஹனுமான் படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், கேப்டன் மில்லர், அயலான் படங்களை விட மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் பாக்ஸ் ஆபிஸில் தரமான சம்பவம் செய்துள்ளது.

குண்டூர் காரம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ்: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக நேற்று வெளியாகியுள்ளது. கமர்சியல் படங்கள் மூலம் தெலுங்கில் பிரபலமான த்ரிவிக்ரம், மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தை இயக்கியுள்ளார். வழக்கம் போல தனது கமர்சியல் ரூட்டில் குண்டூர் காரம் படத்தை இயக்கியுள்ளார் த்ரிவிக்ரம். மகேஷ் பாபுவும் தனது ஸ்டைலிஷான நடிப்பால் இந்தப் படத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

 Guntur Kaaram Box Office: Mahesh Babus Guntur Kaaram has grossed Rs 44.50 crore on the first day box office

மகேஷ் பாபுவின் அப்பாவும் அம்மாவும் அடுத்தடுத்து சில மாத இடைவெளியில் மறைந்தனர். இதனால் மகேஷ் பாபு மட்டுமின்றி அவரது ரசிகர்களும் சோகத்தில் இருந்தனர். அதற்கெல்லாம் மருந்தாக மீண்டும் தனது பாசிட்டிவ் வைப் மூலம் குண்டூர் காரம் படத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார் மகேஷ் பாபு. இதனால் அவரது ரசிகர்களும் குண்டூர் காரம் படத்தை கொண்டாடி வருகின்றனர். நேற்று வெளியான இந்தப் படத்துக்கு முதல் நாளிலேயே தரமான ஓபனிங் கிடைத்துள்ளது.

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் குண்டூர் காரம் படம் திரையிட்ட பல திரையரங்குகளுக்கு முன்பு போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படும் அளவிற்கு ரசிகர்கள் திரண்டிருந்தனர். பெங்களூரு, சென்னை போன்ற சிட்டிகளிலும் குண்டூர் காரம் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் முதல் நாளில் குண்டூர் காரம் திரைப்படம் 45 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக டோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திரா, தெலங்கானா மட்டுமில்லாமல், மற்ற மொழிகளிலும் குண்டூர் காரம் வசூல் பட்டையை கிளப்பியுள்ளது. இதனால் வரும் நாட்களிலும் இந்தப் படத்தின் வசூல் தாறுமாறாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் 5 கோடி ரூபாயும், தமிழ்நாட்டில் 50 லட்சம் வரையும் குண்டூர் காரம் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தெலுங்கில் வெளியான ஹனுமான் படமும் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறதாம்.

தமிழில் வெளியான சிவகார்த்திகேயனின் அயலான் முதல் நாளில் 5 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. அதேபோல், தனுஷின் கேப்டன் மில்லர் 8 முதல் 10 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்துள்ளது. இந்தப் படங்களை பந்தாடிய குண்டூர் காரம், பொங்கல் பாக்ஸ் ஆபிஸில் ரியல் வின்னராக சம்பவம் செய்துள்ளது. குண்டூர் காரம் படத்தில் மகேஷ் பாபுவுடன் மீனாட்சி செளத்ரி, ஸ்ரீ லீலா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X