Guntur Kaaram Box Office: இந்தாண்டில் முதல் 200 கோடி கலெக்‌ஷன்... குண்டூர் காரம் செய்த சாதனை!

சென்னை: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்துள்ள குண்டூர் காரம் திரைப்படம் இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக 12ம் தேதி வெளியானது. த்ரிவிக்ரம் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல், இந்தாண்டு பாக்ஸ் ஆபிஸில் குண்டூர் காரம் திரைப்படம் தான் முதல் வசூல் சாதனை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் குண்டூர் காரம்: சர்க்குவாரி பாட்டா படத்துக்குப் பின்னர் மகேஷ் பாபு நடித்துள்ள குண்டூர் காரம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியானது. டோலிவுட் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு நடிப்பில் த்ரிவிக்ரம் இயக்கியுள்ள திரைப்படம் குண்டூர் காரம். தெலுங்கில் கமர்சியல் படங்கள் இயக்குவதில் கில்லாடி த்ரிவிக்ரம். அதனால், குண்டூர் காரம் படத்துக்கும் ரசிகர்களிடம் அதிகளவில் ஹைப் இருந்தது.

 Guntur Kaaram Box Office: Mahesh Babus Guntur Kaaram has reached Rs 200 crore at the box office

அதற்கேற்ப கடந்த வாரம் 12ம் தேதி வெளியான குண்டூர் காரம் படத்துக்கு, முதல் நாளில் இருந்தே அட்டகாசமான ஓபனிங் கிடைத்தது. ஆந்திரா, தெலங்கானா மட்டுமின்றி, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மற்ற மாநிலங்களிலும் குண்டூர் காரம் படம் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். இதனால், தமிழில் கேப்டன் மில்லர், அயலான் படங்களுக்கும் போட்டியாக காணப்பட்டது குண்டூர் காரம்.

இதனால் முதல் நாளில் குண்டூர் காரம் திரைப்படம் 45 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்பட்டன. அதேபோல், இரண்டாவது நாளிலும் குண்டூர் காரம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மாஸ் காட்டியது. அதேநேரம் தெலுங்கில் வெளியான ஹனுமான் படமும் குண்டூர் காரத்துக்கு போட்டியாக விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸிலும் மெர்சல் காட்டியது. ஆனால், குண்டூர் காரம் முதல் மூன்று நாட்களில் 164 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

இதனால் மகேஷ் பாபு உட்பட படக்குழுவினரும் உற்சாகத்தில் இருந்தனர். இந்நிலையில் தொடர்ந்து பொங்கல் விடுமுறை இருந்ததால் குண்டூர் காரம் வசூல் தற்போது இன்னும் உச்சம் தொட்டுள்ளது. அதன்படி இந்தப் படம் 200 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளதாக டோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தாண்டில் குண்டூர் காரம் தான் முதல் 200 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழில் சிவகார்த்திகேயனின் அயலான் 50 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. தனுஷின் கேப்டன் மில்லர் 35 கோடி வரை கலெக்‌ஷன் செய்துள்ளது. ஆனால், மகேஷ் பாபுவின் குண்டூர் காரம், பாக்ஸ் ஆபிஸில் அயலான், கேப்டன் மில்லர் படங்களை பந்தாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. குண்டூர் காரம் படத்தில் மகேஷ் பாபுவுடன் மீனாட்சி செளத்ரி, ஸ்ரீ லீலா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X