Don't Miss!
- News
மறைந்தது குயில்..பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Lifestyle
உங்கள் தலைமுடியில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
முதலாம் ஞானமே.. மூன்றாம் ஞாலமே.. இரண்டாம் தாயே.. பாக்கியராஜுக்கு குரு சிஷ்யன் பிறந்தநாள் வாழ்த்து!
சென்னை: இந்திய சினிமாவின் சிறந்த திரை கதையாசிரியர் என ரசிகர்கள் மற்றும் பிரபலங்களால் பாராட்டப்பட்ட இயக்குநர் பாக்கியராஜின் 68வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் பாக்கியராஜின் சிஷ்யனான பார்த்திபன் மற்றும் குரு பாரதிராஜா பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.
திரைப்பிரபலங்களை விடாது துரத்தும் கொரோனா… பிரபல இசையமைப்பாளரும் கொரோனாவால் பாதிப்பு !

பாக்கியராஜ் பிறந்தநாள்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளன்கோயிலில் 1954ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி கிருஷ்ணசாமி மற்றும் அமராவதியம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் பாக்கியராஜ். திரைக்கதையாசிரியர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட இயக்குநர் பாக்யராஜின் 68வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

குருவை வாழ்த்திய சிஷ்யன்
இயக்குநர் பாரதிராஜாவின் சிஷ்யனாக சினிமாவில் பிரபலமான பாக்கியராஜ் இயக்குநர் பார்த்திபனுக்கு குருவாக மாறினார். தனது குருவின் பிறந்தநாளை முன்னிட்டு தனது ஸ்டைலில் கவித்துவமாக சிறப்பான பிறந்தநாள் வாழ்த்து மடலை இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
முதலாம் ஞானமே
இரண்டாம் தாயே
"முதலாம் ஞானமே
மூன்றாம் ஞாலமே
இரண்டாம் தாயே!
வணங்குகிறேன்!!!
எனக்கு சினிமாவின் தாமஸ் ஆல்வா எடிசன் KB சார்! ஆனால் என்னை special edition ஆக சினிமாவில் உருவாக்கியவர் என் குரு KB சார்! இன்னொரு கை ஓசையின்றி வந்தவர்.. போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டியத் தலைவர். ஓட்டுரிமையுள்ள குருசிஷ்யன் என நடைபெற உள்ள இயக்குநர் சங்கத் தேர்தலையும் மனதில் வைத்துக் கொண்டு பார்த்திபன் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் சங்கம்
"பெரும்பான்மையான இயக்குனர்கள் இரு பா'க்களின் மூலமே வந்தவர்கள் Copy-ஐ rights ஆக கொள்ளாத,சுய சிந்தனாவாதியின் copy rights-க்காக போராடி உரிமை பெற்று தந்தவர் கௌரவத்தை தங்க தாம்பாளத்தில் தாம்பூலத்துடன் வைத்து வரவேற்கப்பட வேண்டியவர்.மென்மையான/மேன்மையான உணர்வுகளின் சங்கமமே இ.சங்கம் 'பா'" என தனது ஸ்டைலில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

"குரு சும்மா விடுவாரா
"குரு சும்மா விடுவாரா
குரு & சிஷ்யன்
உறவுக்கு இலக்கணமாக
திகழும் என் ராஜனுக்கு
இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள்.
உனக்கு என்றும்
நான் துணை நிற்பேன்.
அன்புடன்
உன் ஆசான்
பாரதிராஜா" என இயக்குநர் பாரதிராஜாவும் அசத்தலாக தனது சிஷ்யன் பாக்கியராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.