»   »  விஜய் ரசிகர்களுக்காக குரு கல்யாண் போட்ட 'இளைய தளபதி ரசிகன்டா'!

விஜய் ரசிகர்களுக்காக குரு கல்யாண் போட்ட 'இளைய தளபதி ரசிகன்டா'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் ரசிகர்களுக்காக ஒரு பாடலை உருவாக்கியுள்ளார் இளம் இசையமைப்பாளரான குரு கல்யாண்.

மாத்தியோசி, குகன், கோட்டி போன்ற படங்களுக்கு இசை அமைத்தவர் குரு கல்யாண்.

சில மாதங்களாக யூடியூபில் தனது இணையதளமான 'குருகல்யாண் ம்யூசிக்' மூலம் தனிப்பாடல்களை வெளியிட்டு வருகிறார்.

Guru Kalyan's new anthem for Vijay fans

'குழந்தைகள்' தினப்பாடல், 'வீரத்தமிழன்' எனும் ஜல்லிக்கட்டு பாடல், 'பாடலாசிரியர் அண்ணாமலை' அவர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாடல், விவசாயம் தொடர்பான 'வதுவை நன்மணம்' எனும் தனிக்கவிதைக்கு பாடல் போன்றவை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக 'வதுவை நன்மணம்...' (இந்தப் பாடலை முதல் முதலாக ஒன்இந்தியா தமிழ்தான் வெளியிட்டது) எனும் பாடலை, நடிகர் விஜயின் ஆஸ்தான பாடலாசிரியர்களுள் ஒருவரான பழநிபாரதி எழுதியிருந்ததால் நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் அப்பாடல் கூடுதல் வரவேற்பை பெற்றது.

நடிகர் விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த இளைய தளபதி ரசிகன்டா... பாடலை உருவாக்கியுள்ளாராம்.

இதுகுறித்து குரு கல்யாண் நம்மிடம் கூறுகையில், "விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் உள்ள தனிச்சிறப்பை கண்டு வியந்து, அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும், நெகிழ்ச்சியான தொடர்பை சொல்லும் வகையிலும் 'இளையதளபதி ரசிகன் டா' எனும் பாடலை உருவாக்க எண்ணினேன். மெட்டமைத்தவுடன் கவிஞர் பழநிபாரதி அவர்களையே இதற்கு பாடல் எழுதித்தரும்படி கேட்டுக்கொண்டேன். அவரும் சம்மதித்தார். 'கில்லி நாங்கடா சொல்லி அடிப்போம்' எனும் இந்த பாடல் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் 'பெர்பெக்ட் விஜய் ஆன்தம்' என்று ரசிக்கப்பட்டு வருகிறது," என்றார்.

Guru Kalyan's new anthem for Vijay fans

விஜய் ரசிகர்களுக்காக மட்டும் பாட்டுப் போட்டால், மற்ற ஹீரோக்களின் ரசிகர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்களா? என்று கேட்டால், நிச்சயம் மாட்டார்கள் சார். சொல்லப் போனா, பல அஜீத் ரசிகர்கள் கூட இந்தப் பாடலைப் பாராட்டியுள்ளனர் என்றார்.

அடுத்து விவசாயிகள் போராட்டத்துக்காக ஒரு பாடலை வெளியிட்டுள்ளார்.

English summary
Music director Guru Kalyan has created a new song titled Ilaiya Thalapathy Rasiganda for Vijay fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil