ஓடு ராஜா ஓடு... மீண்டும் ஹீரோவாகும் ‘ஜோக்கர்’!
குரு சோமசுந்தரம் ஹீரோவாக நடித்து வரும் படத்திற்கு ‘ஓடு ராஜா ஓடு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சென்னை : 'ஜோக்கர்' பட நாயகன் குரு சோமசுந்தரம் நாயகனான நடிக்கும் புதிய படத்திற்கு ஓடு ராஜா ஓடு எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தமிழில் பல குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்த போதும், குரு சோமசுந்தரத்திற்கு தனிப்பட்ட நல்ல அடையாளம் கொடுத்த படம் ஜோக்கர். ராஜூ முருகன் இயக்கத்தில் இவர் நடித்திருந்த ஜோக்கர் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து நாயகன் வாய்ப்பிற்காக மட்டும் காத்திருக்காமல், குற்றமே தண்டனை, யாக்கை, பாம்புசட்டை என கிடைத்த நல்ல கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்தார் சோமு.
இந்நிலையில், தற்போது புதிய படமொன்றில் நாயகனாக நடித்து வருகிறார் சோமு. ஜதின் இயக்கும் அப்படத்திற்கு, 'ஓடு ராஜா ஓடு' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. காமெடி திரில்லர் படமான இப்படத்தை ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே, இப்படத்தின் ப்ரோமோ பாடல், பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை விஜய் சேதுபதி வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓடு ராஜா ஓடு தவிர வஞ்சகர் என்ற படத்தில் வில்லனாக சோமு நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











