இளையராஜா, யுவன் கெரியரில் முதல் முறையாக நடக்கும் அந்த அதிசயம்
சென்னை: விஜய் சேதுபதியின் அடுத்த படமான மாமனிதன் பூஜையுடன் துவங்கியுள்ளது.
இயக்குனர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதி ஒன்று சேர்ந்துள்ள மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த படத்தில் காயத்ரி ஹீரோயினாக நடிக்கிறார். ஜோக்கர் படம் புகழ் குரு சோமசுந்தரம் விஜய் சேதுபதியின் நண்பராக நடிக்கிறார்.
படப்பிடிப்பு ஆண்டிப்பட்டியில் வெள்ளிக்கிழமை துவங்கியது.

முஸ்லீம்
மாமனிதன் படத்தில் குரு சோமசுந்தரம் முஸ்லீமாக நடிக்கிறார். விஜய் சேதுபதி இந்துவாக நடிக்கிறார். குரு சோமசுந்தரம் படம் முழுக்க வருவாராம். இந்து, முஸ்லீம் ஒற்றுமையை காட்டும்படி படம் இருக்கும் என்று சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். குருவும், விஜய் சேதுபதியும் சேர்ந்து நடிப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

காயத்ரி
காயத்ரி விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்கும் 4வது படம் மாமனிதன். 10ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு டைப்ரைட்டிங் சொல்லிக் கொடுக்கும் டீச்சராக நடிக்கிறாராம் காயத்ரி. காயத்ரி மிகவும் திறமையான புத்திசாலியான நடிகை என்று விஜய் சேதுபதி மேடை ஒன்றில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன்
மதுரை அருகே உள்ள ஆண்டிப்பட்டியில் படப்பிடிப்பை துவங்கியுள்ளோம். 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்திவிட்டு அதன் பிறகு கேரளா, காசி, ராமேஸ்வரத்திற்கு செல்கிறோம் என்கிறார் சீனு ராமசாமி. படத்திற்கு இளையராஜாவும், அவரின் மகன் யுவனும் சேர்ந்து இசையமைக்கிறார்கள். இசையமைக்கும் பணி இன்னும் துவங்கவில்லையாம்.

எதிர்பார்ப்பு
முதல் முறையாக இளையராஜாவும், யுவனும் சேர்ந்து ஒரு படத்திற்கு இசையமைக்கிறார்கள். பாடல்கள் நிச்சயம் தாருமாறாக வரும் என்பதில் சந்தேகமே இல்லை. தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை ஆகிய படங்களை அடுத்து மாமனிதன் படத்தில் சீனு ராமசாமியும், விஜய் சேதுபதியும் ஒன்று சேர்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











