twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இது நித்யானந்தா படமல்ல நித்யா நந்தா படம்... விளக்குகிறார் அஅஅ ஆதிக்!

    நித்யா நந்தா படம் பற்றி ஆதிக் ரவிச்சந்திரன் விளக்கம்.

    |

    சென்னை: காதலைத் தேடி நித்யா நந்தா திரைப்படம் பற்றி ஆதிக் ரவிச்சந்திரன் முக்கிய விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

    த்ரிஷா இல்லன்னா நயன்தாரா திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் ஜீ.வி. பிரகாஷ் இணையும் படம் நித்யா நந்தா. இப்படம் ஃபேன்ண்டசி திரைப்படமாக தயாராகிறது.

    GV movie about Adhik Ravichandran!

    இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதிலிருந்து இது சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவைப் பற்றிய படமோ என கேள்வி எழுந்தது.

    ஆனால், இது நித்யானந்தா பற்றிய படமல்ல நித்யா, நந்தா என்ற இருவரைப் பற்றிய படம் என ஆதிக் ரவிச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.

    இப்படத்தில் பாலிவுட் நடிகை அமைரா தஸ்த்துர் நடிக்கிறார். படத்தின் அறுபது சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. த்ரிஷா இல்லன்னா நயன்தாரா திரைப்படம் விமர்சனத்திற்குள்ளானாலும், மிகப்பெரிய வெற்றிபெற்றது.

    அதேபோல் இப்படமும், இளைஞர்களுக்குத் தேவையான பல விஷயங்களைக் கொண்ட திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜீவி.பிரகாஷுக்கு அடுத்ததாக ராஜிவ் மேனனின் இயக்கத்தில் சர்வம் தாள மயம் மற்றும் வசந்தபாலனின் இயக்கத்தில் ஜெயில் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.

    English summary
    Kadhalaithedi Nithya Nanda is all about two Nithya and Nanda love story, the story not based on godman Nithyananda says Adhik Ravichandran.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X