‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தில் எம்ஜிஆர் ரசிகராக ஜி.வி.பிரகாஷ்
சென்னை: ரஜினி ரசிகராக நடிப்பதுதான் இப்போது பேஷன். ஆனால் புதுவிதமாக எம்.ஜி.ஆர். ரசிகராக ஒரு நடிகர் நடிக்கிறார். அவர் பிறவி நடிகர் கூட இல்லை.. புதுமுக நடிகர்தான்.. ஆனால் பிரபலமான இசையமைப்பாளர்.. அவர்தான் பென்சில் நாயகன் ஜி.வி.பிரகாஷ்.
இசையமைப்பாளராக இருந்து 'பென்சில்' படம் மூலமாக கதாநாயகன் ஆனவர் ஜி.வி.பிரகாஷ். இவரது அடுத்தப் படம் 'திரிஷா இல்லைனா நயன்தாரா'. இப்படத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ரசிகராக நடிக்கிறாராம் ஜிவி.

கல்லூரி நாட்கள்...
இப்படத்தில் ஜிவி பிரகாஷின் பள்ளி மற்றும் கல்லூரி இறுதி நாட்களில் நடந்த சம்பவங்கள் படமாக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்.ஜி.ஆர். டிசர்ட்...
அதன்படி, தீவிர எம்ஜிஆர் ரசிகனாக நடிக்கும் ஜி.வி. அவரது போட்டோ பிரிண்ட் செய்யப்பட்ட டி சர்ட்களை அணிந்து நடித்துள்ளாராம்.

இரு நாயகிகள்...
மேலும், இப்படத்தில் ஜி.வி.க்கு இரண்டு நாயகிகளாம். அதில் ஒருவரான ஆனந்தி தான் தற்போது பிரபு சாலமனின் கயல் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மற்றொரு நாயகியாக சிருஷ்டி நடிக்கிறார்.

ஜிவிபி...
படம் முடிந்தும் பேசாம ஜிவிபி என்று பெயரை மாத்தி வச்சுக்குங்க பிரகாஷ். எம்.ஜி.ஆர். ரசிகருக்கேற்ற மாதிரி செம பொருத்தமாக இருக்கும். எம்.ஜி.ஆர். அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட விஜிபி ரேஞ்சுக்காவது எக்ஸ்ட்ரா புகழ் கிடைக்குமே...


Click it and Unblock the Notifications











