தமிழன்கிட்ட அவ்வளவு எளிதா நம்ம கட்சிய கொண்டு சேர்க்க முடியாது: அடங்காதே ஜி.வி.
கூர்மையான வசனங்கள் அடங்காதே படத்தில் உள்ளதாக ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை: அடங்காதே திரைப்படத்தில் கூர்மையான வசனங்கள் இருக்கும் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
ஷண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள அடங்காதே திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

இப்பட விழாவில் பேசிய நடிகர் யோகிபாபு ஜி.வி.பிரகாஷும் நானும் அண்ணனும் தம்பியும் மாதிரி, எனக்கு அதிகமாக பேசவராது நன்றி என விடை பெற்றுக் கொண்டார்.
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் பேசும்போது மிகப்பெரிய நடிகரான சரத்குமார் படக்குழுவினருடன் குடும்பத்து உறுப்பினர்போல் பழகியதாகவும், உண்மையில் அவர் ஒரு குழந்தை மாதிரி எனவும் கூறினார்.
படத்தை பற்றி பேசும்போது, சோசியல், பொலிட்டிகல் த்ரில்லர் எனவும், இப்படத்தில் கூர்மையான வசனங்கள் உள்ளது எனவும் கூறினார். இத்திரைப்படத்தில் மற்ற படங்களைப் போல அல்லாமல் வித்தியாசமாக இசையைமைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிகாரத்தில் இருக்க வேண்டுமென்றால் கதை சொல்ல வேண்டும். அது உண்மையாக இருக்க வேண்டுமென்று தேவையில்லை. மக்கள் நம்பினால் போதும் என்ற வசனத்துடன் தொடங்கும்போது ஆழமான அரசியல் பேச வருகிறது எனத் தெரிகிறது. சரத்குமார், மந்திரா பேடி, சுரபி என எல்லோருமே தங்களின் பங்களிப்பை உணர்ந்து செயல்பட்டுள்ளது தெரிகிறது. இறுதியில் உலகத்துக்கே அரசியல் சொல்லிக் கொடுத்தவன் தமிழன். அவங்கிட்ட நம்ம கட்சியை அவ்வளவு எளிதாக கொண்டு சேர்க்க முடியாது என முடிகிறது.


Click it and Unblock the Notifications











