படையப்பா நீலாம்பரி மாதிரி அசத்துறாரே அப்பாஸ்.. ஜார்ஜ் மரியம் ராக்கிங்.. ஹாப்பி ராஜ் டிரைலர் எப்படி?
சென்னை: மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், அப்பாஸ், ஜார்ஜ் மரியம், ஸ்ரீகெளரி பிரியா நடிப்பில் உருவாகியுள்ள 'ஹாப்பி ராஜ்' படத்தின் டிரைலர் இன்று வெளியானது. டிராகன், டியூட் வரிசை படங்கள் ரசிகர்களை தியேட்டர்களில் சிரிப்பலையில் ஆழ்த்திய நிலையில், வெற்றிப் பெற்றன. அதே ரூட்டை இந்த முறை எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என ஜி.வி. பிரகாஷ் கையில் எடுத்துள்ளார்.
டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நடித்த ஜார்ஜ் மரியம் தான் இந்த படத்திலும் ஹைலைட் என்பது டிரைலரின் முதல் ஷாட்டில் இருந்து கடைசியாக அப்பாவை அசிங்க அசிங்கமாக திட்டிவிட்டு, போன் வந்ததும் அப்பா என பம்முவது என அடிபொலியாக உள்ளது.

ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும், பெரிதாக படங்கள் எதுவும் ஓடுவது இல்லை. இந்நிலையில், ஹாப்பி ராஜ் ஆல்ரெடி ஓடிடி, சாட்டிலைட் வியாபாரம் நடந்து லாபத்தை ஈட்டியுள்ளதாக சமீபத்தில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் ஜி.வி. பிரகாஷ் பேசிய நிலையில், கண்டிப்பாக இந்த படமாவது அவருக்கு பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்பாஸ் கம்பேக்: படையப்பா படத்தில் நீலாம்பரி படிகட்டில் நடந்து வருவதை அப்பாஸ் ஆச்சர்யத்துடன் பார்ப்பார். அதே போல ஒரு ஷாட் இந்த படத்தில் அப்பாஸ் கம்பேக் கொடுத்துள்ளதை குறிக்கும் வகையில் வைத்து ரசிகர்களை வாவ் சொல்ல வைத்துள்ளனர். ஹீரோயினின் அப்பாவாக வந்து அப்பாஸ் இன்னொரு பக்கம் ஸ்கோர் செய்கிறார். இந்த படத்தில் அவர் தான் ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீகெளரி பிரியா காதலுக்கு எதிரியாக உள்ளார் என்பதை டிரைலரில் ரிவீல் செய்துள்ளனர்.
டிரைலர் எப்படி இருக்கு?: பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் தான் படத்தின் இயக்குநர் என்பதால் பிரதீப் ரங்கநாதன் பட பாணியிலேயே ஜி.வி. பிரகாஷை வைத்து எடுத்துள்ளார். அதுமட்டும் தான் கொஞ்சம் ஒட்டாமல் உள்ளது. மற்றபடி படத்தின் காட்சிகள் மற்ற நடிகர்களின் நடிப்பு உள்ளிட்டவை காமெடி கலக்கல் தான். வரும் மார்ச் 27ம் தேதி வெளியாகவுள்ள ஹாப்பி ராஜ் இந்த மாதம் வெளியாகவுள்ள கென் கருணாஸின் யூத் படத்தை பாக்ஸ் ஆபீஸ் போட்டியில் அடிச்சுத் தூக்குமா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











