ஜிவி பிரகாஷ்குமார், கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் "செல்ஃபி" ரிலீஸ் தேதி வெளியானது!

சென்னை: இசையமைப்பாளராக இருந்து இப்பொழுது நல்ல நடிகராக தமிழ் சினிமாவை கலக்கி கொண்டுள்ளார் ஜிவி பிரகாஷ் குமார்

ஸ்டைலிஷான காதல் மற்றும் ஆக்சன் படங்களை இயக்கி இயக்குனராக வெற்றி வலம் வந்து கொண்டிருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் செல்ஃபி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்

கௌதம் வாசுதேவ் மேனன், ஜிவி பிரகாஷ் இணைந்து நடித்துள்ள செல்ஃபி படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி உள்ளது

ஹீரோவாக

ஹீரோவாக

தமிழ் சினிமாவின் இசை அசுரன் என அனைவராலும் அழைக்கப் படுபவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான இசைகளின் மூலம் அனைவரையும் கவர்ந்து வரும் இவர் இப்பொழுது ஹீரோவாகவும் படங்களில் தோன்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.

லிவிங் டுகெதர்

லிவிங் டுகெதர்

அந்த வகையில் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பேச்சுலர் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்றது. இளம் தலைமுறையினர் காதல் என்ற வலையில் விழுந்து லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து பின் இறுதியில் எவ்வாறான சிக்கல்களை சந்திக்கிறார்கள் என்பதை மிகத் தெளிவாக சமூக அக்கறையுடன் கூறிய இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது

செல்ஃபி

செல்ஃபி

கைநிறைய திரைப்படங்களில் மிக பிஸியாக நடித்து வரும் ஜிவி பிரகாஷ்குமார் சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அந்த வகையில் இப்போது இயக்குனர் வெற்றிமாறன் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் இயக்கத்தில் செல்ஃபி படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ஆக்சன் கதைகளில்

ஆக்சன் கதைகளில்

தனது ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கும் ஜிவி பிரகாஷ்குமார் இந்த படத்தில் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஆக்சன் கதைகளில் நடித்து உள்ளார்

கெளதம் வாசுதேவ் மேனன்

கெளதம் வாசுதேவ் மேனன்

ஸ்டைலிஷான காதல் கதைகள் மற்றும் ஆக்சன் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இன்றுவரை வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் நடிகராகவும் படங்களில் மிரட்டி வருகிறார். மிடுக்கான போலீஸ் அதிகாரி மற்றும் வில்லன் வேடங்களில் கலக்கி கொண்டிருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் செல்ஃபி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். செல்பி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ரிலீஸ் தேதி

ரிலீஸ் தேதி

கலைபுலி எஸ் தாணு வழங்கும் இந்த படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக மட்டுமல்லாமல் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X