ஜி.வி பிரகாஷ், மைக்செட் ஸ்ரீராம் கூட்டணியின் அடுத்த பாடல்... "வாடி என் செல்லக்குட்டி"
சென்னை: திரைப்பட பாடல்களுக்கு இணையாக தனி ஆல்ப பாடல்களும் சமூகவலைத்தளங்களில் மாஸ் காட்டி வருகின்றன.
ஏ.ஆர் ரகுமான் முதல் பல்வேறு இசை கலைஞர்கள், கவிஞர்கள் தற்போது தனியிசை ஆல்பங்கள் வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் மைக்செட் ஸ்ரீராம் இரண்டாவது முறையாக ஒரு வீடியோ பாடலை பிரம்மாண்டமாக வெளியிட்டிருக்கிறார்.

சென்னை மாலில்...
இளைஞர்கள் முதல் எல்லோரையும் மெஸ்மரிசம் செய்யும் நடிகரும் இசை அமைப்பாளருமான ஜீவி பிரகாஷ் குரலில் உருவாகி இருக்கும் இப்பாடல் சமீபத்தில் சென்னை PVR மாலில் மைக்செட் ஸ்ரீராம் ரசிகர்கள் முன்னிலையில் மிகப்பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. மிகுந்த ஆரவாரத்திற்கு நடுவே மிகவும் எளிமையாக ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக இந்த பாடல் வெளியீடு நடை பெற்றது .

ஹேய் சிங்கரி
மைக்செட் ஸ்ரீராம் ஜீவி பிரகாஷ் கூட்டணியில் ஏற்கெனவே உருவான ஹேய் சிங்கரி பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அதைத் தொடர்ந்து இன்று வெளியாகியுள்ள வாடி என் செல்லக்குட்டி என்ற பாடலும் அட்டகாசமாக ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. AJ (அருள் ராஜ்) இசை அமைத்துள்ள இப்பாடலை மைக்செட் ஸ்ரீராம் எழுதியுள்ளார். இந்த வீடியோபாடலில் மைக்செட் ஸ்ரீராம் உடன் லீட் ரோல் செய்து அசத்தி இருக்கிறார் ஜனனி துர்கா.

பாடல் வெளியீட்டு விழா
அசார் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இளைஞர்களை ஈர்க்கும் வகையிலான கலை நேர்த்தியுடன் இந்த வீடியோ பாடலை இயக்கியுள்ளனர் வில்வா மற்றும் AJ(அருள் ராஜ்). இந்த ஆல்பத்தை மைக்செட் புரொடக்சன் தயாரித்துள்ளது.சமீபத்தில் நடைபெற்ற இப்பாடல் வெளியீட்டு விழாவில், PVR South head மீனா சாப்ரியா, நடிகர் RJ விக்னேஷ்காந்த், கதிர், ப்ராங்க்ஸ்டார் ரகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

துள்ளல் இசை, மெலடி பாடல்கள்
மைக்செட் ஸ்ரீராம் ஒவ்வொரு ஆண்டும் தன் ரசிகர்களை தன் வசம் வைத்து கொள்வதற்காக பல புதிய முயற்சிகள் செய்து வருகிறார். திரைப்பட பாடல்களுக்கு இணையாக தனி ஆல்ப பாடல்களும் சமூகவலைத்தளங்களில் மாஸ் காட்டி வருகின்றன என்பதை நன்கு புரிந்து கொண்டு மிக பெரிய பட்ஜெட் என்பதை முடிந்த வரை முயற்சி செய்து துள்ளல் இசை, மெலடி பாடல்கள் என பல வெரைட்டி காட்ட- ஒட்டு மொத்த குழுவும் தயாராகி வருகிறது. வரும் மாதங்களில் இந்த 2022 முடிவத்திற்குள் இன்னமும் நிறைய ஆல்பம் பாடல்கள் வெளிவந்து ஹிட் அடிக்கும் என்று மிகவும் உறுதியாக இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











